For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எப்படி ஐஸ் வைக்கணும்னு இவரு கிட்ட கத்துக்குங்க.. ஒரேடியா எல்லாரையும் கேப்டன்னு சொல்லிட்டாரே!

மும்பை : இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா சுழல் கூட்டணிக்குப் பின், குல்தீப் - சாஹல் சுழல் கூட்டணி பெரும் பெயரை சம்பாதித்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே போட்டியில் ஆடினால் எதிரணிக்கு திண்டாட்டம்தான்.

இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம். அவர் சொல்லும் யோசனைகளை வைத்து இருவரும் பல முறை விக்கெட் வீழ்த்தி உள்ளனர். தோனியுடன், மற்ற மூத்த வீரர்களும் தங்களுக்கு உதவுகிறார்கள் என்று மொத்தமாக ஐஸ் வைத்துள்ளார் சாஹல்.

Yuzvendra Chahal explains how Dhoni, Kohli and Rohit helped him

இது பற்றி பேசுகையில், தோனி எப்போதும் ஆடுகளம் எப்படி செயல்படும் என்பது குறித்து அறிய எங்களுக்கு உதவுவார். அவரோடு விராட் மற்றும் ரோஹித் சர்மாவும் உதவுவார்கள் என்றார்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா? சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணம் இதுதான்.. கௌதம் கம்பீர் எதை சொல்றாரு தெரியுமா?

தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூவரையும் கேப்டன்கள் என குறிப்பிட்டு பேசிய சாஹல், எங்கள் அணியில் நிறைய கேப்டன்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்துள்ளனர். அதுதான் குல்தீப் யாதவ்வும், நானும் வெற்றிகரமாக இருக்கக் காரணம் என்றார் சாஹல்.

இந்திய அணி அடுத்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் அல்லது தற்காலிக கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா ஆகிய மூவரையும் வாயார கேப்டன் எனக் கூப்பிட்டு யாருக்கும் குறை வைக்காமல் ஐஸ் வைத்துள்ளார் சாஹல். நாளைப் பின்னே கேப்டனை மாத்துனாலும் மாத்துவாங்க.. எல்லாம் ஒரு தொலைநோக்கு பார்வைதான்!

Story first published: Wednesday, May 15, 2019, 16:36 [IST]
Other articles published on May 15, 2019
English summary
Yuzvendra Chahal explains how Dhoni, Kohli and Rohit helped him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X