For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சேட்ட புடிச்ச பையன் சார்”.. தென்னாப்பிரிக்க வீரரை ஓங்கி உதைத்த யுவேந்திர சாஹல்.. திடீர் பதற்றம்!

கவுகாத்தி: டி20 போட்டியின் போது இந்திய வீரர் யுவேந்திர சாஹல் செய்த விஷயம் இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரிலும் அதே பிரச்னை... கடுப்பான ரோஹித் சர்மா

தென்னாப்பிரிக்காவுடனான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி நிர்ணயித்த 238 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்ரோகித் சர்மா கையை தாக்கிய பந்து.. பதறி போன ரசிகர்கள்.. 400வது டி20 போட்டியில் ஹிட்மேனுக்கு சோகம்

2வது டி20

2வது டி20

இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களின் வானவேடிக்கை தவிர, மற்றும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. ஆட்டத்தின் போது திடீரென பாம்பு ஒன்று களத்திற்கு புகுந்ததால் வீரர்கள் ஓரம் அழைத்து செல்லப்பட்டு போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் மின் விளக்குகள் திடீரென அணைந்ததால் மீண்டும் போட்டிகள் நிறுத்தப்பட்டு வந்தன.

யுவேந்திர சாஹல் சேட்டை

யுவேந்திர சாஹல் சேட்டை

இந்நிலையில் இந்த இடைவேளை நேரத்தில் சாஹல் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக உள்ளது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு குளிர்பானங்களை கொடுப்பதற்காக சாம்ஷி வந்திருந்தார். அவர்களுடன் ரிஷப் பண்ட்-ம் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த யுவேந்திர சாஹல் சாம்ஷியை பின்னாடி இருந்து ஓங்கி உதைத்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்க வீரரை சாஹல் என்ன திடீரென உதைக்கிறார் என ரசிகர்களும் பதறினர். ஆனால் சகஜமாக திரும்பிய சாம்ஷி சாஹலின் தோளில் கையை போட்டுக்கொண்டு ஜாலியாக பேசி வலம் வந்தார். சாஹல் சற்று குசும்பு பிடித்தவர் தானே, என ரசிகர்களும் அமைதியாகினர். பின்னர் இருவரும் ஒற்றுமையாக களத்தை விட்டு வெளியேறினர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஏன் உதைத்தார்?

யுவேந்திர சாஹல் மற்றும் தப்ரைஸ் சாம்ஷி இருவரும் ஐபிஎல்-ல் ஆர்சிபி அணிக்காக ஒன்றாக விளையாடியவர்கள் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை சாம்ஷி அந்த அணிக்காக விளையாடியுள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்ற முறையில் விளையாடிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, October 3, 2022, 15:27 [IST]
Other articles published on Oct 3, 2022
English summary
Yuzvendra Chahal hilariously kicks to Tabraiz Shamsi in the back during India vs south africa 2nd t20 Match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X