For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெற்றோருக்காக மனம் கலங்கிய சாஹல்.. அந்த நிலைமையில் எப்படி விளையாட முடியும்..ஐபிஎல்-ல் சந்தித்த சவால்

ஐபிஎல் தொடர் நிறுத்தப்படவில்லை என்றால் நானாக வெளியேறி இருப்பேன் என ஆர்சிபி வீரர் சாஹல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

மனம் கலங்கிய Chahal !அந்த நிலைமையில் எப்படி விளையாட முடியும்.. | Oneindia Tamil

மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் அணிகளின் பபுள்கள் உடைந்து திடீரென கொரோனா நுழைந்தது. இதனையடுத்து மே 4ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

கீப்பர் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்ட பண்ட்.. புலம்பும் சாஹா.. இங்கிலாந்து தொடர் குறித்து ஆதங்கம்கீப்பர் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்ட பண்ட்.. புலம்பும் சாஹா.. இங்கிலாந்து தொடர் குறித்து ஆதங்கம்

ஏப்.9ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன, மீதம் 31 போட்டிகள் உள்ளன.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

இந்த தொடரில் ஆர்சிபி அணி மிகச்சிறப்பாக விளையாடிய போதும், அணியின் நட்சத்திர பவுலர் யுவேந்திர சாஹல் மட்டும் பெரிய அளவில் சோபிக்காமல் இருந்தார். மொத்தம் 7 போட்டிகளில் விளையாடிய அவர் 4 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றினார். அவரின் ஓவர்களில் ரன்களும் தாறுமாறாக பறந்தது. இதன் காரணமாக யுவேந்திர சாஹலுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்

கிளம்பி இருப்பேன்

கிளம்பி இருப்பேன்

இந்நிலையில் இவர், ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டிருக்காவிட்டால் நானாக வெளியேறி இருப்பேன் எனக்கூறியுள்ளார். இதற்கு காரணம் அவரது தாய் - தந்தை. சாஹ ஐபிஎல் தொடரில் இருந்த போது அவரின் பெற்றோருக்கு கொரோனா உறுதியானது. அவரின் தாயார் அறிகுறிகள் இன்றி இருந்த போதும், தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

காரணம்

காரணம்

இதுகுறித்து தற்போது மனம் திறந்துள்ள சாஹல், எனது பெற்றோரின் நிலை அறிந்ததும் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிடலாம் என்று எண்ணினேன். பெற்றோர்கள் வீட்டில் சிரமத்தில் இருக்கும் போது விளையாட்டில் கவனம் செலுத்துவது மிக கடினம். அவர்களுக்கு மே 3ம் தேதி கொரோனா உறுதியானது, அடுத்த 2 நாட்களில் ஐபிஎல் ஒத்திவைக்கப்பட்டது.

பெற்றோர் உடல்நிலை

பெற்றோர் உடல்நிலை

என் தந்தைக்கு ஆக்சிஜன் அளவு 85 - 86 என்ற கணக்கிற்கு சென்றுவிட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவந்த அவரை, நேற்றுதான் வீட்டிற்கு அழைத்து வந்தோம். எனினும் அவருக்கு இன்னும் கொரோனா பாசிட்டீவ் ஆகவே உள்ளது. ஆனால் அவரின் ஆக்சிஜன் அளவு தற்போது 95 -96 என்ற கணக்கில் சீராக உள்ளது. எங்களுக்கு தற்போதுள்ள ஒரே ஆறுதல் அதுமட்டும் தான். இன்னும் 7 - 10 நாட்களில் தந்தை குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன் என சாஹல் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 21, 2021, 21:29 [IST]
Other articles published on May 21, 2021
English summary
Yuzvendra Chahal revealed that he planned to take a break from IPL
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X