For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்துவிடுங்கள்.. வழக்கு போட்ட முன்னாள் கேப்டன்

ஹராரே : ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது.

கடந்த சில வருடங்களாக நிர்வாக ரீதியான சர்ச்சைகள், அரசியல் தலையீடு என பல விவகாரங்களில் சிக்கிய ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு, நிதி நெருக்கடியில் சிக்கியது.

வீரர்கள் தேர்விலும் பல குழப்பங்கள் ஏற்பட்டு அந்த நாட்டின் கிரிக்கெட் அணி பரிதாபகரமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி பலருக்கும் கொடுக்க வேண்டிய பாக்கிகளை கொடுக்காமல் உள்ளது ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு.

பணத்தை செட்டில் பண்ணுங்க

பணத்தை செட்டில் பண்ணுங்க

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ஹீத் ஸ்ட்ரீக், தனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கலைத்து அதன் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடன்களை அடைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.

ஐசிசி கொடுத்த பணம் எங்கே?

ஐசிசி கொடுத்த பணம் எங்கே?

ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஐசிசி பல வகைகளில் நிதி உதவி செய்துள்ளது. அதையெல்லாம் சரியாக கையாளாமல் வீணாக்கி விட்டது எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார் ஹீத் ஸ்ட்ரீக்.

ஹீத் ஸ்ட்ரீக் கோபம் ஏன்?

ஹீத் ஸ்ட்ரீக் கோபம் ஏன்?

ஹீத் ஸ்ட்ரீக் கடந்த சில மாதங்களுக்கு முன், ஜிம்பாப்வே அணி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அணியை உலகக்கோப்பைக்கு தகுதி பெற வைக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. அப்போதிருந்து ஹீத் ஸ்ட்ரீக் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

சம்பள பாக்கி எவ்வளவு?

சம்பள பாக்கி எவ்வளவு?

ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு ஹீத் ஸ்ட்ரீக்கிற்கு சுமார் 92 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது. அதே போல பேட்டிங் பயிற்சியாளராக இருந்த லான்ஸ் க்ளுஸ்னருக்கு 8 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சம்பள பாக்கி வைத்துள்ளது என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.

Story first published: Monday, September 24, 2018, 17:22 [IST]
Other articles published on Sep 24, 2018
English summary
Zimbabwe cricket financial situatin is worse as Heath Streak applied for liquidation of the board to pay debts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X