ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு தடை விதித்தது ஐசிசி.. இப்படியா பண்ணுவீங்க? அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்

லண்டன் : ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).

ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டில் நீண்ட காலமாகவே குழப்பங்கள் நிலவி வந்தன. அரசாங்கம் கிரிக்கெட் போர்டின் விவகாரங்களில் தலையிடுவதாக கூறி பலமுறை சர்ச்சைகள் கிளம்பின. அதனால், தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இந்த தடையால் எந்த ஐசிசி தொடர்களிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தடை ஏன்?

தடை ஏன்?

ஐசிசி நீண்ட காலமாக முயன்று பார்த்தும், ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டு விவகாரத்தில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில், சுதந்திரமான, ஜனநாயக முறைப்படியான முறயில் போர்டு தேர்தலை நடத்த உறுதி அளிக்காததாலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய முடியாத நிலையிலும், அந்த கிரிக்கெட் அணியை தடை செய்வதாக அறிவித்துள்ளது ஐசிசி.

இனி என்ன நடக்கும்?

இனி என்ன நடக்கும்?

இந்த தடையால் ஜிம்பாப்வே கிரிக்கெட் போர்டுக்கு ஐசிசி எந்த நிதி உதவியும் வழங்காது. மேலும், ஐசிசி நடத்தும் எந்த கிரிக்கெட் தொடர்களிலும் ஜிம்பாப்வே அணி பங்கேற்க முடியாது. மற்ற ஐசிசி உறுப்பு நாடுகளும், ஜிம்பாப்வே உடன் கிரிக்கெட் ஆடுவதை தவிர்த்து விடுவார்கள்.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

இதில் பெரிய பாதிப்பாக இருப்பது, அடுத்து நடக்க உள்ள டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியால் பங்கேற்க முடியாது என்பது தான். ஏற்கனவே, ஜிம்பாப்வே அணி இந்த தகுதிச் சுற்றுத் தொடரில் பங்கேற்கும் என கூறப்பட்டதால் இதில் குழப்பமும் நிகழ்கிறது.

தீர்வு இது தான்

தீர்வு இது தான்

ஜிம்பாப்வே அணியின் இக்கட்டான நிலைக்கு இப்போது இருக்கும் ஒரே தீர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள் நேர்மையாக தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகத்தின் கையில் போர்டு வர வேண்டும். அதன்பின் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஐசிசி கூட்டத்தில், ஜிம்பாப்வே மீதான தடை குறித்து விவாதித்து முடிவு எட்டப்படும்.

வீரர்கள் கலக்கம்

ஜிம்பாப்வே வீரர்கள் இந்த தடையால் அதிர்ந்து போய் மனமுடைந்து இருக்கிறார்கள். ஜிம்பாப்வே நாட்டில் கிரிக்கெட்டை சார்ந்து இருக்கும் நூற்றுக்கணக்கான மக்களின் வேலை ஒரு கணத்தில் பறிக்கப்பட்டுவிட்டது என ஐசிசி மீது விமர்சனம் செய்து வருகிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Zimbabwe Cricket suspended by ICC with immediate effect
Story first published: Friday, July 19, 2019, 12:53 [IST]
Other articles published on Jul 19, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X