For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

SPOT FIXING பண்ணு..! இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்..!! பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார்

ஹராரே: கிரிக்கெட்டையே ஆட்டி படைக்கும் மேட்ச் பிக்சிங் புகார் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Recommended Video

பிரபல Zimbabwe Cricket வீரரை Match Fixing செய்ய மிரட்டிய India தொழிலதிபர்

மும்பையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் தான் இந்த ஸ்பாட் பிக்சிங்கிற்கு பின்புலத்தில் இருப்பதாக பகீர் புகார்கள் எழுந்துள்ளது.

களத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணிகளத்தில் 5 தமிழக வீராங்கனைகள்..!! 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆசிய கால்பந்து கோப்பையில் இந்திய மகளிர் அணி

அதுவும் அந்தரங்க வீடியோவை ரிலீஸ் செய்துவிடுவேன் என்று அந்த தொழில் அதிபர் மிரட்டியுள்ளார். என்ன நடந்தது.. ? எப்படி நடந்தது? யார் செய்தார் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்.

பணத்துடன் கடிதம்

பணத்துடன் கடிதம்

ஜிம்பாப்வேவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராண்டன் டைலருக்கு இந்திய தொழில் அதிபரிடமிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது அதில் ஜிம்பாப்வேவில் டி20 கிரிக்கெட் தொடரை தொடங்க ஆர்வமாக உள்ளோம். நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் .இதை பற்றி ஆலோசனை நடத்த இந்தியா வரும்மாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் அதிபர் பார்டி

தொழில் அதிபர் பார்டி

மேலும் இந்தியா வருவதற்காக 15 ஆயிரம் அமெரிக்க டாலர் டைலருக்கு வழங்கப்பட்டுள்ளது. 6 மாதங்களாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சம்பளம் வழங்காததால் பிரண்டன் டைலரும், இந்தியா வந்து அந்த தொழில் அதிபரை சந்தித்துள்ளார். அப்போது அந்த தொழில் அதிபர் ஒரு பார்டிக்கு டைலரை அழைத்து சென்று, சில வஸ்துகளை தந்துள்ளார்

அந்தரங்க வீடியோ

அந்தரங்க வீடியோ

முதலில் வேண்டாம் என்று சொன்ன டைலர், தொழில் அதிபர் வற்புறுத்தியதால் அதனை உட்கொண்டுள்ளார். பின்னர், அங்கிருந்த மாடல் அழிகிகளுடன் டைலர் உல்லாசமாக இருந்துள்ளார். இதனையடுத்து அடுத்த நாள், தொழில் அதிபர் நேரடியாக டைலரின் அறைக்கு வந்து , நேற்று நீ செய்த காரியங்களை எல்லாம் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்

மிரட்டல்

மிரட்டல்

நான் சொல்வதை போல் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் செய்தால் உனக்கு கூடுதல் பணம் தருகிறேன் என்று கூறி 20 ஆயிரம் அமெரிக்க டாலரை அந்த தொழில் அதிபர் வழங்கியுள்ளார். தாம் மிரட்டப்படுகிறோம் என்பதை உணர்ந்த டைலர் அதற்கு ஓப்புகொண்டு அங்கிருந்த புறப்பட்டு ஜிம்பாப்வேவுக்கு புறப்பட்டார்

4 மாதங்களுக்கு பின் புகார்

4 மாதங்களுக்கு பின் புகார்

ஜிம்பாப்வே வந்ததும், தனது அந்தரங்க வீடியோ வெளியானால் என்ன செய்வது என்று பயத்தில் தவறான பழக்கங்களுக்கு டைலர் அடிமையாகி உள்ளார்.இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்து 4 மாதங்களுக்கு பிறகு ஐ.சி.சி.யிடம் டைலர் புகார் அளித்துள்ளார். இது குறித்து ஐ.சி.சி. விசாரணை நடத்தி வருகிறது. எனினும் சூதாட்ட தரகர்கள் யாராவது அணுகினால் உடனடியாக ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்க வேண்டும்

டைலர் கடிதம்

டைலர் கடிதம்

அப்படி கூறாமல் தாமதப்படுத்தினால், பிக்சிங் செய்ததற்கான தண்டனையே வழங்கப்படும் என்பது ஐ.சி.சி. விதி. இதனால் பிராண்டன் டைலர் மீது ஐ.சி.சி தடை விதிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவங்கள் அனைத்தையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள டைலர், நான் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றும் கிரிக்கெட் மீது உண்மையாக பற்று கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். தமது மனநலம் பாதிக்கப்பட்டதால் உடனடியாக ஐ.சி.சி.யிடம் புகார் அளிக்க முடியவில்லை. இனி நான் செய்த தவறை இளம் வீரர்கள் செய்ய வேண்டாம் என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

Story first published: Monday, January 24, 2022, 21:03 [IST]
Other articles published on Jan 24, 2022
English summary
Zimbabwe cricketer Brendon taylor spotfixing case and his shocking Letter ஸ்பாட் பிக்சிங் பண்ணு..! இல்ல உன் அந்தரங்க வீடியோ ரீலிஸ் ஆயிடும்..!! பிரபல கிரிக்கெட் வீரர் பகீர் புகார்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X