பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ.. அடிவாங்கிய ஜப்பான்..கதறிய கனடா! உலககோப்பையில் என்ன நடந்தது

தோஹா : ஃபிஃபா உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று இரண்டு அதிர்ச்சி தோல்விகளை பலமான அணிகள் சந்தித்தது. உலக கால்பந்து தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணி, தரவரிசையில் 22வது இடத்தில் உள்ள மொராகோவிடம் தோல்வியை தழுவியது.

எடன் ஹசார்ட், கேவிட் டி புருன் போன்ற தலைச் சிறந்த வீரர்களை அடங்கிய பெல்ஜியம் அணி, கடந்த முறை அரையிறுதி வரை சென்றது. பெல்ஜியம் அணி உலககோப்பை கால்பந்து வரலாற்றில் 1994 ஆம் ஆண்ட தொடருக்கு பிறகு ஒரு முறை கூட முதல் சுற்றில் தோல்வியை தழுவவில்லை.

ஆனால், இந்த தொடரில் கனடாவை எதிர்கொண்ட போதே பெல்ஜியம் அணி கஷ்டப்பட்டு தான் 1க்கு0 என்ற கோல் கணக்கில் வென்றத. தற்போது பெல்ஜியத்தின் குறையை மொராகோ வெளிச்சம் போட்டு காட்டியது.

இப்போதைய பேட்ஸ்மேனுக்கு ஏன் பந்துவீச தெரியவில்லை.. காரணத்தை சரியாக கணித்த வசீம் ஜாபர்.. மாறுமா ? இப்போதைய பேட்ஸ்மேனுக்கு ஏன் பந்துவீச தெரியவில்லை.. காரணத்தை சரியாக கணித்த வசீம் ஜாபர்.. மாறுமா ?

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

போட்டி தொடங்கியதில் இருந்தே மொராகோ வீரர்கள் தான் ஆக்ரோரணமாக விளையாடி பெல்ஜியத்திற்கு ஷாக் கொடுத்தனர். புள்ள பூச்சுக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன் என்பது போல் பெல்ஜியம் விளையாட , முதல் பாதியின் இறுதி மணி துளியில் மொராகோ அணி முதல் கோலை போட்டது. எனினும் அது ஆஃப் சைட் என்று கோல் திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 68வது நிமிடத்திற்கு பிறகு போட்டிக்குள் வந்தார் சபீர்.

பெல்ஜியம் தோல்வி

பெல்ஜியம் தோல்வி

ஆனால் களத்திற்கு வந்த உடனே தனது வேலை செய்ய தொடங்கினார் சபீர். போட்டியின் 73வது நிமிடத்தில் தமக்கு கிடைத்த ஃபிரி கிக் வாய்ப்பை கோலாக மாற்ற பெல்ஜியம் அணி பாதி உயிரை விட்டது. இதனால் உற்சாகம் அடைந்த மொராகோ, போட்டி முழுவதும் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து போட்டியின் கூடுதல் நேரத்தில் 2வது கோலை அடிக்க, இறுதியில் 2க்கு0 என்ற கோல் கணக்கில் மொராகோ அணி வென்றது.

வாய்ப்பு இருக்கா?

வாய்ப்பு இருக்கா?

இதன் மூலம் 1986ஆம் ஆண்டுக்கு பிறகு மொராகோ அணி, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. தற்போது பெல்ஜியம் அணியை பொறுத்தவரை பலமான குரோஷிய அணியை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்பபு கிடைக்கும். இதே போன்று தரவரிசையில் 24வது இடத்தில் இருந்த ஜப்பானும், 31வது இடத்தில் இருந்த கோஸ்டா ரிக்காவும் மோதியது.

ஜப்பான், கனடா தோல்வி

ஜப்பான், கனடா தோல்வி

ஜெர்மனியை வீழ்த்திய உத்வேகத்தில் களமிறங்கிய ஜப்பானுக்கு கோஸ்டா ரிக்கா அதிர்ச்சி அளித்தது. போட்டியின் 83வது நிமிடத்தில் ஃபுல்லர் முதல் கோல் அடிக்க, அதனை சமன் செய்ய முடியாமல் ஜப்பான் தோல்வியை தழுவியது.இதே போன்று கனடாவும், குரோஷிய அணியும் மோதின. இதில் கனடா உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் தங்களது முதல் கோலை பதிவு செய்தது. அந்த சந்தோஷத்தை மட்டும் தான் அவர்கள் பெற்றனர். அதன் பிறகு கனடாவை கதற, கதற குரோஷிய அணி 4க்கு1 என்ற கோல் கணக்கில் வேட்டையாடியது. இந்த தோல்வியின் மூலம் கனடா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
2022 FIFA World cup round up - Morocco stunned the red devils belgium and japan shaken by costa rica பெல்ஜியத்துக்கு அதிர்ச்சி அளித்த மொராகோ.. அடிவாங்கிய ஜப்பான்..கதறிய கனடா! உலககோப்பையில் என்ன நடந்தது
Story first published: Monday, November 28, 2022, 0:31 [IST]
Other articles published on Nov 28, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X