For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

டாப் வீரருக்கு பாதிப்பு.. சிஎஸ்கே மாதிரி பெயரை சொல்லாமல் அடம் பிடித்த பிஎஸ்ஜி.. வெளியான உண்மை!

பாரிஸ் : பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) எனும் பிரபலமான பிரெஞ்சு கால்பந்து அணியில் முக்கிய வீரர் உட்பட மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த மூன்று வீரர்களின் பெயர்களை வெளியிடாமல் "3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு" என பிஎஸ்ஜி சமாளித்து வருகிறது.

ஆனால், பிரெஞ்சு நாட்டு பத்திரிக்கைகளில் அந்த மூன்று வீரர்கள் யார் என முழு விவரமும் வெளியாகி உள்ளது.

ரெய்னா என் பையன் மாதிரி.. சிஎஸ்கே ஓனர் சீனிவாசன் பல்டி.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!ரெய்னா என் பையன் மாதிரி.. சிஎஸ்கே ஓனர் சீனிவாசன் பல்டி.. வாயடைத்துப் போன ரசிகர்கள்!

சிஎஸ்கே அணியில் கொரோனா

சிஎஸ்கே அணியில் கொரோனா

2020 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வீரர்கள் தீபக் சாஹர், ருதுராஜ் கெயிக்வாட் என ஊருக்கே தெரிந்தாலும் இன்னும் சிஎஸ்கே அணியும், பிசிசிஐயும் இரண்டு வீரர்களுக்கு பாதிப்பு என்றே கூறி வருகின்றன.

நெய்மருக்கு பாதிப்பு

நெய்மருக்கு பாதிப்பு

அதே போலவே, பிஎஸ்ஜி விஷயத்திலும் நடந்துள்ளது. உலகின் முன்னணி வீரரான நெய்மருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலேயே அந்த அணி பெயர்களை வெளியிடாமல் மூடி மறைத்து வருவதாக தெரிகிறது. பிரேசில் வீரரான நெய்மர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கால்பந்து உலகை அதிர வைத்துள்ளது.

மூன்று வீரர்கள் யார்?

மூன்று வீரர்கள் யார்?

பிஎஸ்ஜி அணியில் நெய்மர், ஏஞ்சல் டி மரியா மற்றும் லியான்ட்ரோ பரேடேஸ் ஆகிய மூவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெய்மர் குறித்தே இதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெய்மர் எப்படி இருக்கிறார்?

நெய்மர் எப்படி இருக்கிறார்?

நெய்மர் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவே தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் 10 அன்று அந்த அணி லீக் 1 கால்பந்து தொடரில் தன் முதல் போட்டியில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, September 2, 2020, 23:07 [IST]
Other articles published on Sep 2, 2020
English summary
3 PSG players tested positive including Neymar says sources. Other two are Angel Di Maria and Leandro Paredes. Neymar health is good and he is under 14 day isolation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X