For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மறக்க முடியாத Pain... என்னதான் ஆச்சு ஸ்பெயினுக்கு?

By Aravinthan R

மாஸ்கோ: கால்பந்து உலகக்கோப்பையின் இரண்டாம் சுற்றில், ரஷ்யாவிடம் தோற்ற ஸ்பெயின் அணி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டது. 2010ஆம் ஆண்டின் சாம்பியனான ஸ்பெயின், முன்னதாகவே தொடரில் இருந்து வெளியேறுவது, பல ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

முதலில் ஜெர்மனி அணி அதிர்ச்சியளித்து முதல் சுற்றிலேயே வெளியேற, இரண்டாவது சுற்றில் ஸ்பெயின் உட்பட பலமான அணிகளாக கருதப்பட்ட அர்ஜென்டினா, போர்சுகல் ஆகிய அணிகள் மூட்டை முடிச்சுகளோடு ஊருக்கு கிளம்புகின்றனர்.

014 உலகக்கோப்பையில் முதல் சுற்றோடு முடிந்த சாம்பியன் கனவு, இந்த முறையாவது நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஸ்பெயின் ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஸ்பெயின் செய்த தவறுகள் என்ன?

#3 கடைசி நிமிடத்தில் பயிற்சியாளர் மாற்றம்

#3 கடைசி நிமிடத்தில் பயிற்சியாளர் மாற்றம்

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் ஜுளன், முதல் போட்டிக்கு இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில் மாற்றப்பட்டார். அவர் ரியல் மாட்ரிட் கிளப் அணிக்கு பணியாற்ற ஒப்புக்கொண்டார் என்ற தகவல் வெளியான நிலையில், அவரை பணி நீக்கம் செய்தது ஸ்பெயின் அணி நிர்வாகம். அவருக்கு பதில், பெர்னாண்டோ ஹியர்ரோ நியமிக்கப்பட்டார். இந்த மாற்றம் வீரர்களை மனதளவில் பாதித்திருக்கும் என்பதோடு, புதிய பயிற்சியாளருக்கும், வீரர்களுக்குமான புரிதலும் சரியான நிலையில் இருந்திருக்காது. இதுவே, ஸ்பெயினின் மோசமான செயல்பாடுகளுக்கு முக்கிய காரணம்.

#2 காணாமல் போன புரிதல்

#2 காணாமல் போன புரிதல்

முன்வரிசை வீரரான டியாகோ கோஸ்டா, திறமையான வீரர் என்ற போதும், மிட்-பீல்ட்-இல் உள்ள வீரர்களுக்கும், அவருக்குமான புரிதல் இல்லாமல் போனதால் அதிக கோல் அடிக்க முடியவில்லை. மிட்-பீல்ட் வீரர்களில் சிலர் தவிர மற்றவர்கள், கோஸ்டாவுடன் அதிகம் ஆடி இருக்கவில்லை என்பதே முக்கிய காரணம். அதே சமயம், கோஸ்டாவுடன் அதிகம் ஆடிய பாப்ரகஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. அவருடைய சமீபத்திய கிளப் போட்டிகளின் செயல்பாடுகள் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால், கோஸ்டாவுடன் அவர் ஆடியபோது, இருவருக்குமான இணைப்பு அட்டகாசமானதாக இருந்துள்ளது. ஒரு வேளை பாப்ரகஸ் இருந்திருந்தால், கோஸ்டா அதிக கோல் அடித்திருக்க வாய்ப்புண்டு.

#1 மாற்று திட்டம் எங்கே?

#1 மாற்று திட்டம் எங்கே?

ரஷ்யாவுடனான கடைசி ஆட்டத்தில், ஸ்பெயின் அணி பந்தை 1113 முறை பாஸ் செய்து உலக சாதனை புரிந்தது. ஆனாலும், இது எந்த வகையிலும் ரஷ்யா அணியை அச்சுறுத்தவில்லை. பந்தை அதிக நேரம் கட்டுக்குள் வைத்திருந்தும் அதை கோலாக மாற்ற முடியவில்லை. இதற்கு காரணம், மாற்று திட்டங்களோ, திடீர் யுக்திகளோ இல்லாமல், ஒரே திட்டத்தில் ஆடியது தான். ரஷ்யாவை பொறுத்தவரை, அவர்கள் மாற்று யுக்திகளை உடைக்கும் அளவு வல்லமை படைத்தவர்கள் அல்ல. அனுபவ அணியான ஸ்பெயின், இதை பயன்படுத்தி அவர்களை எளிதாக வென்று இருக்கலாம். ஆனாலும், எந்த முயற்சியும் இல்லாமல், தோல்வியை சந்தித்தது.

ஆள் பெரிதாக இருந்தால் போதுமா

ஆள் பெரிதாக இருந்தால் போதுமா

இந்த உலகக் கோப்பையில் ஜாம்பவான் வீரர்களும், அணிகளும் மண்ணைக் கவ்வியுள்ளன. பழைய பெருமையோடு வலம் வந்த அணிகளுக்கு வசமான பாடம் கற்பித்துக் கொடுத்துள்ளன மற்ற அணிகள். உஷாராக விளையாட வேண்டியதும், அந்த நேரத்தில் போடப்படும் சிறப்பான திட்டங்களுமே கை கொடுக்கும் என்பதுமே பெரிய அணிகளுக்குக் கிடைத்துள்ள பாடமாகும்.

Story first published: Monday, July 2, 2018, 17:38 [IST]
Other articles published on Jul 2, 2018
English summary
Spain lost to Russia in the Worldcup Round of 16 and ends the worldcup dream of Spain in 2018. The reasons for the failure is discussed here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X