For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

தாய்லாந்து காலி.. அடுத்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ஐ அடித்து நொறுக்குமா இந்திய கால்பந்து அணி?

அபுதாபி: 2019 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை 4 -1 என்ற கோல் கணக்கில் வென்றது தனிச் சிறப்பாகும்.

ஆனால் இப்போது ஸ்டீபன் கான்ஸ்டன்டைனின் வீரர்கள் ஒரு பெரிய சவாலை சந்திக்க உள்ளனர். இந்திய வீரர்களின் அடுத்த எதிரியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியுடனான ஆட்டம் நாளை அபுதாபியில் உள்ள ஸயாத் ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நடைபெறவுள்ளது.

AFC Asian cup 2019 : India vs UAE match preview

தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டாவது பாதியில் எப்படி இருந்ததோ அதைப் போன்று ஒரு ஆட்டத்தை இந்திய வீரர்களிடம் இருந்து நாளை இந்திய பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன் எதிர்பார்க்கிறார். ஆட்டத்தின் முதல் பாதியில் தாய்லாந்து அணி இந்திய அணியை 1 - 1 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. ஆனால் அதற்குப்பின் இந்தியாவின் அதிரடி ஆட்டம் யாரும் எதிர்பாராதது. அந்த பிரமாண்டமான ஆட்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

எங்கள் அணியில் உள்ள வீரர்கள் உற்சாகமான இளம் வீரர்கள். தாய்லாந்து அணி வீரர்களும் திறமையானவர்கள் என்றாலும் அவர்கள் எங்களுக்கு எதிரிகள் என்கிறார் இந்திய பயிற்சியாளர் கான்ஸ்டன்டைன்.

ஆனால் தடுப்பாட்டத்தின் மூலம் இந்திய அணி தாய்லாந்தின் வாய்ப்புகளை கைப்பற்றியது. சுனில் ஷட்டரி இரண்டு கோல்களையும், ஜெஜெ மற்றும் அனிருத் தப்பா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்து வெற்றியைத் தேடித் தந்தனர்.

அதே நேரத்தில் கோல் அடிக்கவில்லை என்றாலும், அனைவரது கண்களையும் பிடித்துக்கொண்ட வீரர் ஆஷிக் குரூனியன்தான். இத்தகைய சூப்பர் வீரர்களைக் கொண்ட இந்திய அணி நாளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

FIFA வில் 79 ஆவது இடத்தைப் பிடித்துள்ள யுஏஇ அணி குரூப் ஏ வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. மிட்ஃபீல்டைப் பொறுத்தவரை அனித் தப்பா மற்றும் ப்ரோனே ஹலேடர் ஆகியோர் உள்ளனர்.

ஆனால் அலி மப்ஹூட் மற்றும் 2015ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை வீரர் அஹ்மத் கலீல் ஆகியோர் எதிர் அணியில் உள்ளதால் இந்திய அணி சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் மாப்கோட் ஏழு கோல்களை அடித்து டாப் ஸ்கோராக உள்ளார். சந்தேஷ் ஜிங்நன் மற்றும் அனாஸ் எடத்தொடிகா ஆகியோர் தடுப்பாட்டக்காரர்களாக களத்தில் உள்ளனர். அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் ஒமர் அப்துல்ரஹ்மான் காயமடைந்துள்ளதால் அவரது சேவையை அந்த அணி இழந்துள்ளது.

பஹ்ரைனில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி, அப்போது தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

தற்போது இந்திய அணி வீரர்களின் திறமைகளை மிகச் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்காக நாங்கள் தயாராகி வருகிறோம். அதுவும் வித்தியாசமான அணுகுமுறையுடன் வருவோம் என்கிறார் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் பயிற்சியாளர் சச்சினோனி.

Story first published: Wednesday, January 9, 2019, 18:06 [IST]
Other articles published on Jan 9, 2019
English summary
AFC Asian cup 2019 : Can India beat UAE match after Thailand?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X