For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"கோக்"குமாக்கான செயல்.. ஒரே நாளில் "இரட்டை" ஆப்பு வைத்த ரொனால்டோ - ரெண்டும் காலி

ஹங்கேரி: ஒரே நாளில் டபுள் செஞ்சுரி (ஆப்பு) அடித்திருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. கிரிக்கெட்டில் தான் டபுள் செஞ்சுரி அடிக்க முடியுமா என்ன? கால்பந்திலும் அடிக்க முடியும் என்பதை நேற்று நிரூபித்து ரசிகர்களை வாய்ப்பளிக்க வைத்திருக்கிறார்.

யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள் ஐரோப்பாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில், தொடரின் நடப்பு சாம்பியன் அணி போர்ச்சுகல் தான். அதன் கேப்டன் G.O.A.T. கிறிஸ்டியானோ ரொனால்டோ.

இந்திய வீரர்கள் ரசித்து ருசிக்கும் இங்கிலாந்து உணவுகள்.. அஷ்வின் இந்திய வீரர்கள் ரசித்து ருசிக்கும் இங்கிலாந்து உணவுகள்.. அஷ்வின்

"F" பிரிவில் தான் போர்ச்சுகல் அணி இடம்பெற்றுள்ளது. நடப்பு உலக சாம்பியன் பிரான்ஸ், 2014 உலக சாம்பியன் ஜெர்மனி, ஹங்கேரி ஆகிய நாடுகள் இதில் தான் இடம்பெற்றுள்ளன. அப்படியெனில், "Group of death" இதுதானே!.

84வது நிமிடத்தில்

84வது நிமிடத்தில்

இப்பிரிவில் பிரான்ஸ் - ஜெர்மனி மோதிய முதல் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. பிறகு, இரண்டாவது போட்டியில் போர்ச்சுகல் - ஹங்கேரி அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் அட்டாக், டிஃபண்ட் என இரண்டுக்கும் பஞ்சமில்லாமல் இரண்டு அணிகளும் மோதின. குறிப்பாக, ஹங்கேரி அணி போர்ச்சுகலின் பல கோல் வாய்ப்புகளை தடுத்து நிறுத்தியது. பிறகு, ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரஃபேல் குரேரியோ முதல் கோல் அடிக்க முன்னிலைப் பெற்றது போர்ச்சுகல்.

3-0 என வெற்றி

3-0 என வெற்றி

இந்த நிலையில், போட்டி முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்த நிலையில், போர்ச்சுகலுக்கு பக்காவான பெனால்ட்டி ஷூட் வாய்ப்பு கிடைத்தது. பந்து இப்போது கேப்டன் ரொனால்டோவின் கால்களுக்கு அடியில் பம்மிக் கொண்டு நிற்க, தனது முதல் கோல்-லை ரெஜிஸ்டர் செய்தார் ரொனால்டோ. பிறகு, மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க, ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் அடுத்த கோல் அடித்து, போட்டியை 3 - 0 என்று தித்திப்புடன் முடித்து வைத்தார் ரொனால்டோ. ஸோ, நம்ம கணக்கின் படி ஒரு ஒரு செஞ்சுரி. அடுத்த செஞ்சுரி கணக்குக்கு செல்வோம்.

வழக்கமான நடைமுறை

வழக்கமான நடைமுறை

நேற்றைய போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் அமைதியாக வந்து கலந்து கொண்ட ரொனால்டோ, ஆர்ப்பாட்டமில்லாமல் செய்த செயல், கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டியிருக்கிறதாம். ஆம்!. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவர் பேச வருவதற்கு முன்பாக, யூரோ கோப்பையின் முக்கிய ஸ்பான்சரான Coca-Colaவின் இரண்டு பாட்டில்கள் மேஜையில் வைக்கப்பட்டு இருந்தது. இது ஒரு வழக்கமான நடைமுறை தான்.

ரூ.29,337 கோடி இழப்பு?

ரூ.29,337 கோடி இழப்பு?

ஆனால், பத்திரிகையாளர் அறைக்குள் நுழைந்து தனது இடத்தில் உட்கார்ந்ததும், தன் முன்பாக இருந்த இரண்டு கோக் பாட்டில்களையும் உற்று உற்றுப் பார்த்த ரொனால்டோ, பொசுக்கென்று, இரண்டையும் தூக்கி கீழே மறைத்துவைத்துவிட்டார். வைத்ததோடு மட்டுமின்றி, தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து, இதை குடியுங்கள் என்பது போல பத்திரிக்கையாளர்களை நோக்கி செய்கை செய்ய, ரூ.29,337 கோடி தொகை கோக்கோ கோலா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 4 பில்லியன் அமெரிக்க டாலர். (என்ன சனா.. தலே சுத்துதா!?)

ஹீரோவா? வில்லனா?

ஹீரோவா? வில்லனா?

எனினும், ரொனால்டோவில் இந்த செயல், யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஸ்பான்சர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறதாக தெரிகிறது. ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாத ரொனால்டோ, நேற்று 2 கோக்கோ பாட்டிலை எடுத்து வைத்து அந்நிறுவனத்தின் வருவாயில் ஆப்பு வைத்து, 2 கோல்கள் மூலம் ஹங்கேரி அணிக்கும் ஆப்பு அடித்திருக்கிறார். இவர் ஹீரோவா? வில்லனா?,

Story first published: Wednesday, June 16, 2021, 14:13 [IST]
Other articles published on Jun 16, 2021
English summary
after ronaldo's coca cola water effect, portugal thrashed hungary euro 2020 - ரொனால்டோ
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X