For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெக்சிகோவை எதிர்க்க நாங்கள் தயார்.. கம்பேக் கொடுக்குமா அர்ஜென்டினா? களமிறங்கும் மெஸ்ஸி!

தோஹா: சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்த அர்ஜென்டினா, இன்றைய போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் எழுச்சி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, ரோனால்டோ ஆகியோருக்கு கடைசி உலகக்கோப்பை தொடர் என்பதால், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுகல் அணிகளின் செயல்பாடுகள் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் இருந்தது.

அர்ஜென்டினா அணி

அர்ஜென்டினா அணி

உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று அர்ஜென்டினா அணி ரசிகர்களிடையே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் குரூபி சுற்றில் சவுதி அரேபியா அணியை எதிர்த்து அர்ஜென்டினா அணி விளையாடியது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா அணி சார்பில் பெனால்டி வாய்ப்பில் மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

 அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

ஆனால் இரண்டாம் பாதியில் சவுதி அரேபியா அணியின் 5 நிமிட இடைவெளியில் இரண்டு கோல் அடித்து பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது. வலிமை வாய்ந்த அர்ஜென்டினா உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அடுத்த இரண்டு குரூப் போட்டிகளில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற வேண்டும் என்று நிலை உருவாகியுள்ளது.

மெக்சிகோ vs அர்ஜென்டினா

மெக்சிகோ vs அர்ஜென்டினா

இந்த நிலையில் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா இன்று விளையாட உள்ளது. ஏற்கனவே குரூப் சி பிரிவில் உள்ள மெக்சிகோ - போலாந்து அணிக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனால் அர்ஜென்டினா அணிக்கு கூடுதல் அழுத்தமும் உள்ளது. இந்த ஆட்டம் அர்ஜென்டினா அணிக்கு இறுதிப்போட்டியை போன்றது என்று அந்த அணியின் மார்டினெஸ் தெரிவித்துள்ளார்.

 மார்டினெஸ் நம்பிக்கை

மார்டினெஸ் நம்பிக்கை

மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டி குறித்து அர்ஜென்டினா அணியின் மார்டினெஸ் கூறுகையில், சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து உள்ளோம். எங்களுக்கு அது மிகப்பெரிய சறுக்கல். ஆனால் அணியாக அனைவரும் ஒன்றிணைந்து உறுதியுடன் இருக்கிறோம். அதேபோல் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டி எங்களுக்கு இறுதிப் போட்டியை போல் இருக்கும்.

 மெஸ்ஸி தயார்

மெஸ்ஸி தயார்

தோல்வியை பற்றி சிந்திக்காமல், அடுத்தப் போட்டியில் கவனம் செலுத்தி என்ன நடந்தாலும் வெற்றிபெறுவதில் கவனமாக இருக்க வேண்டும். எங்களின் சிறிய தவறுகளால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளோம். அதனை இனி செய்ய மாட்டோம் என்று நினைக்கிறேன். மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம். நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி உடல்தகுதியுடன் இருக்கிறார். நிச்சயம் மெக்சிகோ அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயம் களமிறங்குவார். எங்கள் ஆட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிவித்தார்.

Story first published: Saturday, November 26, 2022, 1:04 [IST]
Other articles published on Nov 26, 2022
English summary
After losing the match against Saudi Arabia, Argentina will play against Mexico in today's match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X