For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

8 மாத கர்ப்பிணி ரசிகையின் தண்ணீர் பிரச்சனை.. உடனே தீர்த்து வைத்த பெங்களூரு அணி!

பெங்களூரு : பெங்களூரு - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள கால்பந்தாட்டப் போட்டியை காண தான் தண்ணீர் பாட்டில்களை கொண்டுவரலாமா என்ற 8 மாத கர்ப்பிணியின் கேள்விக்கு பெங்களூரு கால்பந்தாட்ட அணி மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளது.

கால்பந்தாட்ட போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவுகளை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படும் நிலையில் தான் தண்ணீர் பாட்டிலை கொண்டுவர அனுமதிக்கப்படுமா என்று மேகனா நாயர் என்பவர் டிவிட்டர் மூலம் கேட்டிருந்தார்.

சில மணி நேரங்களிலேயே மேகனாவின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள பெங்களூரு புட்பால் டீம், உரிமையாளர்கள் பெட்டியில் இருந்து போட்டியை காண மேகனாவிற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

 ரசிகர்களை கட்டிப்போடும் ஆட்டம்

ரசிகர்களை கட்டிப்போடும் ஆட்டம்

உலகெங்கிலும் கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள விளையாட்டு என்றால் அது கால்பந்தாட்டம் தான். கிரிக்கெட்டுக்கு சற்றும் சளைக்காத வகையில் ரசிகர்களை கட்டிப்போடும் இந்த ஆட்டம் வெகுவான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 கேரளா பிளாஸ்டர்சுடன் மோதல்

கேரளா பிளாஸ்டர்சுடன் மோதல்

இந்தியாவிலும் கால்பந்தாட்டத்திற்கு அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில் பெங்களூரு கந்தீரவா மைதானத்தில் பெங்களூரு கால்பந்தாட்ட கிளப் அணி வரும் சனிக்கிழமை கேரளா பிளாஸ்டர்சுடன் உள்ளூர் போட்டியில் மோதவுள்ளது.

8 மாத கர்ப்பிணி கோரிக்கை

இந்நிலையில் இந்தப் போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும், 8 மாத கர்ப்பிணியான தனக்கு அரங்கத்திற்குள் தண்ணீர் பாட்டிலை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பெங்களூருவை சேர்ந்த மேகனா என்பவர் டிவிட்டர் மூலம் பெங்களூரு கால்பந்தாட்ட டீமை கேட்டிருந்தார்.

தண்ணீர் பாட்டில் கொண்டுவர அனுமதிக்க கோரிக்கை

கடந்த போட்டிகளை தான் காண வந்தபோது, சுடுதண்ணீர் கிடைக்காமல் தான் மிகுந்த அவதிக்குள்ளானதாக தெரிவித்த மேகனா, தான் வீட்டிலிருந்து சுடுதண்ணீர் கொண்டுவர தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

 உரிமையாளர் பெட்டியில் போட்டியை காணலாம்

உரிமையாளர் பெட்டியில் போட்டியை காணலாம்

மேகனாவின் கேள்விக்கு பெங்களூரு கால்பந்தாட்ட டீம் உடனடியாக பதில் போஸ்ட் போட்டது. 8 மாத கர்ப்பிணியான அவர், உரிமையாளர்கள் உட்காரும் பெட்டியில் இருந்துக் கொண்டு போட்டியை கண்டுகளிக்கலாம் என்று தெரிவித்த அவர்கள், அங்கு அவருக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்றும் ரசிகர்களே தங்களூக்கு முக்கியம் என்றும் கூறினர்.

 கணவருடன் போட்டியை காண விருப்பம்

கணவருடன் போட்டியை காண விருப்பம்

இந்த பதில் மிகவும் டச்சிங்காக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள மேகனா, இந்த மேட்ச்க்கு மிகப்பெரிய கால்பந்தாட்ட ரசிகரான தன்னுடைய கணவர் சூரஜ்ஜூடன் தான் செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 21, 2019, 19:28 [IST]
Other articles published on Nov 21, 2019
English summary
Bengaluru Football club makes favor to Pregnant Fan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X