For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"ஆபத்பாந்தவன் வெலன்சியா" அதிரடி காட்டிய ஈகுவடார்.. தப்பித்த நெதர்லாந்து.. டிராவில் முடிந்த ஆட்டம்!

தோஹா: நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் இன்றைய நாளின் மூன்றாவது ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள ஈகுவடார் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி மோதியது. முதல் போட்டியில் செனகல் அணிக்கு எதிராக நெதர்லாந்து அணி டிரா செய்திருந்தது.

அதேபோல் ஈகுவடார் அணி தங்களது முதல் போட்டியில் கத்தார் அணியை வீழ்த்தி இருந்தது. இதனால் குரூப் ஏ பிரிவில் இந்த ஒரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

நெதர்லாந்தின் அதிர்ச்சி

நெதர்லாந்தின் அதிர்ச்சி

இதனைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்திலேயே நெதர்லாந்து அணி ஈகுவடாருக்கு அதிர்ச்சி கொடுத்தது. நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கோடி கேக்போ நெதர்லாந்து அணிக்காக முதல் கோல் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து ஈகுடவார் அணி தொடர்ந்து தாக்குதல் பாணி ஆட்டத்தில் ஈடுபட்டது. குறிப்பாக 20 நிமிடங்களுக்கு மேல், ஈகுவடார் அணி அடுத்தடுத்து அட்டாக் மேல் அட்டாக் செய்தது.

முதல் பாதி முடிவு

முதல் பாதி முடிவு

ஆனால் நெதர்லாந்து அணியின் கேப்டன் விர்ஜில் வான் மற்றும் கோல்கீப்பர் நொப்பர்ட் ஆகியோர் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். இதன்பின்னர் முதல் பாதி ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஈகுவடார் அணி கோல் ஒன்றை அடித்து அசத்தியது. ஆனால் நடுவர்கள் அந்த கோலை அங்கீகரிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி முன்னிலையில் இருந்தது.

 வெலன்சியா கோல்

வெலன்சியா கோல்

பின்னர் முதல் பாதி தொடக்கத்தில் நெதர்லாந்து கோல் அடித்ததை போல், இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ஈகுவடார் அணி முதல் கோலை அடித்து அசத்தியது. ஈகுவடார் அணியின் கேப்டன் வெலன்சியா அபாரமாக கோல் அடித்து அசத்தினார். இதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டனர்.

டிராவில் முடிந்த ஆட்டம்

டிராவில் முடிந்த ஆட்டம்

ஆனால் இருவரின் முயற்சிக்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 64வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் எஸ்டிபினின் அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் அடித்து வெளியேறியது. இதன் பின்னர் ஆட்டம் முழுக்க முழுக்க ஈகுவடார் அணியின் கால்களுக்குள் இருந்தது. இறுதியாக இரண்டாம் பாதி ஆட்டம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

Story first published: Friday, November 25, 2022, 23:51 [IST]
Other articles published on Nov 25, 2022
English summary
The match between Netherlands and Ecuador ended in a 1-1 draw. Netherlands and Ecuador sharing points and sitting in the top half of the group with four points each
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X