For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஐயோ போச்சே.. வரலாறு காணாத தோல்வியால் அழுது புரண்ட பிரேசில் ரசிகர்கள்

By Veera Kumar

பெலேஹரிசான்ட்: உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் அரையிறுதியில் நேற்று நள்ளிரவு ஜெர்மனி- பிரேசில் நடுவே நடந்த போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்றது. போட்டியை நடத்தும் பிரேசில் அடைந்த இந்த படுதோல்வியை பார்த்து மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான உள்ளூர் ரசிகர்கள் கடுமையான அதிர்ச்சியடைந்தனர். கண்ணீர் விட்டும் கதறினர்.

பிரேசில் ரசிகர்கள் உருக்கம், ஆட்டத்தில் பறந்த அனல் போன்றவற்றின் 'கிளிக்' இதோ உங்கள் பார்வைக்கு:

இந்தா ஆரம்பிச்சிட்டோமில்ல..

இந்தா ஆரம்பிச்சிட்டோமில்ல..

ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே ஜெர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் கோல் போட்டு, அந்த அணிக்கான முதல் போணியை தொடங்கி வைத்தார். அவரின் 'கால் ராசியோ' என்னவோ தெரியவில்லை. அதன்பிறகு ஜெர்மனிக்கு கோல் மழையாக பொழிந்து கொண்டிருந்தது.

என்னடா நடக்குது இங்கே..

என்னடா நடக்குது இங்கே..

ஜெர்மனி அணி அடுத்தடுத்து கோல்களை போட்டபோதும், பிரேசிலால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஜெர்மனி தனது 5வது கோலை போட்டபோது, இங்கு என்னதான் நடக்கிறது என்ற சந்தேகத்தோடும், ஆதங்கத்தோடும், வெறுமையை உணர்ந்த நிலையில் மைதானத்தில் நிற்கும் பிரேசில் கேப்டன் டேவிட் லூயிஸ்.

டேய் கொன்னே போடுவேன்டா..

டேய் கொன்னே போடுவேன்டா..

விரக்தியில் இருந்த பிரேசில் வீரர் மார்செலோவும், ஜெர்மனியின் ஜெரோம் போட்டங்கும் ஆட்டத்தின் நடுவே கைகளை நீட்டி ஆக்ரோஷமாக மோதிக் கொள்கின்றனர்.

ஏமாற்றத்தின் வலி

ஏமாற்றத்தின் வலி

உலக கோப்பையை 6வது முறையாக தூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தங்கள் நாடு எதிரணியின் தாக்குதலுக்கு பதில் சொல்ல கூட முடியாமல் தவிப்பதை பார்த்து உடைந்து போய் அழும் பிரேசில் ரசிகை.

ஏன்ணே எங்களை ஏமாற்றினீர்கள்..?

ஏன்ணே எங்களை ஏமாற்றினீர்கள்..?

நம்ம பிரேசில் அண்ணன்மார்கள் கில்லி மாதிரி விளையாடுவார்கள் என்று நம்பி ஸ்டேடியத்துக்கு வந்த இந்த சிறுவன், அண்ணன்கள் எதிரணியால் அடிபடுவதை பார்த்து வேதனை தாங்க முடியாமல் கதறுகிறான்.

போச்சே.. போச்சே..

போச்சே.. போச்சே..

முந்தைய போட்டியில் பெற்ற மஞ்சள் அட்டை காரணமாக, பிரேசில் கேப்டன் டி.சில்வா அரையிறுதி போட்டியில் விளையாட முடியவில்லை. தற்காலிக கேப்டனாக டேவிட் லூயிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். போட்டி முடிந்து வெளியே வந்தபோது துக்க வீட்டுக்கு சென்று திரும்பியவர்கள் கட்டித் தழுவுவது போல லூயிசும், டி.சில்வாவும் அணைந்து ஆறுதல் தேடுகிறார்கள்.

Story first published: Wednesday, July 9, 2014, 12:45 [IST]
Other articles published on Jul 9, 2014
English summary
Brazilian soccer fans cried as they saw their dream of winning a World Cup at home crushed after their team allowed a record seven goals from Germany. The 7-1 scoreline yesterday was the worst defeat in the soccer-crazed nation’s history, dashing hopes of overcoming the national tragedy of losing the final game of the 1950 World Cup at home.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X