For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸியை தொடர்ந்து நெய்மர் சொதப்பல்.... சுவிட்சர்லாந்துடன் டிரா செய்தது பிரேசில்!

ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. இதில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் பிரேசில் 1-1 என டிரா செய்தது.

ரோஸ்தோன் ஆன்டான்: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடனான ஆட்டத்தில் 1-1 என முன்னாள் சாம்பியன் பிரேசில் டிரா செய்தது. அர்ஜென்டினாவின் மெஸ்ஸியைத் தொடர்ந்து பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

Brazil settles for draw against switzerland in the fifa world cup

இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. இ பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் செர்பியா 1-0 என கோஸ்டாரிகாவை வென்று அசத்தியது. இரண்டாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துடன் ஐந்து முறை சாம்பியனான பிரேசில் 1-1 என டிரா செய்தது.
----
பிரிவு இ
பிரேசில் - சுவிட்சர்லாந்து
1 - 1
----
உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 18 முதல் ஆட்டங்களில் 16ல் பிரேசில் வென்றுள்ளது. 2ல் டிரா செய்துள்ளது. கடைசியாக 1934ல் ஸ்பெயினுக்கு எதிராக தோல்வியடைந்தது. இதுவரை நடந்துள்ள அனைத்து உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ள ஒரே அணியான பிரேசில், ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக உள்ளது.

கடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் ஜெர்மனியிடம் 7-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பிரேசில், ஆறாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது.

பிரேசிலுடன் ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து ஒரு சாதாரண அணியாக தெரியும். ஆனால், இதுவரை மூன்று முறை காலிறுதிக்கு நுழைந்துள்ள சுவிட்சர்லாந்து அணி, 11வது முறையாக உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பது, தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்பது என்பது சாதாரணமான விஷயமல்ல.

இன்று நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் என்பதை பிரேசில் அவ்வப்போது நிரூபித்தது. 55 சதவீத நேரம் பந்து அந்த அணியிடம் இருந்தது. கோலடிக்கும் வாய்ப்பு அந்த அணிக்கு 20 முறை கிடைத்தது. அதில் 4 முறை கோல் பகுதியில் பந்தை செலுத்தியது.

ஆனால், மக்கள் தொகையில் குட்டி நாடான சுவிட்சர்லாந்து பிரேசிலுக்கு கடும் சவால் விடுத்தது. தடுப்பாட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, பிரேசிலின் கோலடிக்கும் வாய்ப்புகளை தடுத்தது.

ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் பிரேசிலின் பிலிப் கோட்டின்ஹோ கோலடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியின் இறுதியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரேசில் முன்னிலையில் இருந்தது.

ஆனால், அந்த சந்தோஷம் சிறிது நேரத்தில் முறியடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தின் ஜூபர் 50வது நிமிடத்தில் கோலடித்து சமநிலையை உருவாக்கினார். நெய்மர் உள்பட பிரேசில் அணி கடுமையாக போராடியும் கோலடிக்கும் வாய்ப்பு அதன்பிறகு பிரேசிலுக்கு கிடைக்கவில்லை.

முன்னாள் உலகச் சாம்பியனான பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் இந்த ஆட்டத்தில் பத்தோடு பதினொன்றாகவே இருந்தார். ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி ஏமாற்றினார். தற்போது அந்த வரிசையில் நெய்மரும் சேர்ந்துள்ளார். இறுதியில் 1-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்துடன் பிரேசில் டிரா செய்தது.

Story first published: Monday, June 18, 2018, 1:44 [IST]
Other articles published on Jun 18, 2018
English summary
Brazil settles for draw against switzerland in the fifa world cup.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X