சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்

பேம்போலிம் : ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 63வது போட்டி கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் 6வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி அணி 9வது இடத்தில் உள்ள எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியுடன் மோதவுள்ளது.

கீழ்த்தரமாக இறங்கிய ஆஸி.. நடராஜன் மீது பிக்ஸிங் புகார்.. கங்குலி என்ன செய்யப் போகிறார்?

இரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் அடுத்த இடத்திற்கு முன்னேறும் போட்டியில் இன்றைய தினம் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன.

63வது போட்டி

63வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 63வது போட்டி இன்றைய தினம் கோவாவின் பேம்போலிம்மில் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் எப்சி மற்றும் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதவுள்ளன. ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் இரு அணிகளும் முறையே 6வது மற்றும் 9வது இடங்களில் உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன.

ஐதராபாத்துடன் மோசமான தோல்வி

ஐதராபாத்துடன் மோசமான தோல்வி

இந்த சீசனின் தன்னுடைய தரமான ஆட்டங்களை சென்னையின் எப்சி அணி வெளிப்படுத்தவில்லை. கடந்த 5 போட்டிகளில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி கொண்டுள்ள இந்த அணி, 3 போட்டிகளை டிரா செய்துள்ளது. மேலும் ஐதராபாத் அணியுடன் 1க்கு 4 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது.

6வது இடத்தில் சென்னையின் எப்சி

6வது இடத்தில் சென்னையின் எப்சி

இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 14 புள்ளிகளை பெற்று ஐஎஸ்எல் 2020-21 புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆடி அடுத்த கட்டத்திற் நகரும் தீவிரம் சென்னையின் அணியிடம் காணப்படுகிறது.

நிலையற்ற போட்டிகள்

நிலையற்ற போட்டிகள்

இந்நிலையில் 11 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி. இந்த அணியும் இந்த தொடரில் நிலையற்ற மற்றும் மெதுவான ஆட்டங்களை ஆடி வருகிறது. இதுவரை இந்த தொடரில் ஆடியுள்ள போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இரு அணிகளும் தீவிரம்

இரு அணிகளும் தீவிரம்

இந்நிலையில் இந்த தொடரில் தன்னுடைய இருப்பை காண்பிக்க விரும்பினால் அடுத்து வரும் போட்டிகளிலாவது சிறப்பான வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஈஸ்ட் பெங்கால் அணிக்கு உள்ளது. இதையடுத்து இன்று ஆடப்படும் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
The East Bengal team struggling in bottom three, have just won two matches in the entire season
Story first published: Monday, January 18, 2021, 18:55 [IST]
Other articles published on Jan 18, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X