For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இத்தாலி கால்பந்து தொடர்… நபோலியை வீழ்த்திய யுவண்டஸ்.. கோப்பையை வெல்ல வாய்ப்பு

ரோம்:இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில், யுவண்டஸ் அணி 2க்கு 1 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தியுள்ளது.

இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் யுவண்டஸ் அணி தனது பரம வைரியான நபோலி அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடினர்.

குறிப்பாக, முதல் பாதியின் 25வது நிமிடத்தில் கோல் அடிக்க வந்த யுவண்டஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவை, நபோலி அணியின் கோல்கீப்பர் அலெக்ஸ் தாக்கினார். அதனால், அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

ISL 2019 : அரையிறுதியில் எஃப்சி கோவா அணி அதிக கோல்கள் அடித்து மும்பையை வீழ்த்தும்!!ISL 2019 : அரையிறுதியில் எஃப்சி கோவா அணி அதிக கோல்கள் அடித்து மும்பையை வீழ்த்தும்!!

பதிலடி

பதிலடி

அதன் மூலம், யுவண்டஸ் அணிக்கு கிடைத்த ஃப்ரீகிக்கை அந்த அணியின் பைஜாமிக் கோலாக மாற்றினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நபோலி அணி விளையாடியது.

வாய்ப்பு நழுவியது

வாய்ப்பு நழுவியது

நபோலி அணி வீரர் செலின்ஸ்கி அடித்த பந்து, கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்றது. இதனால், நபோலி அணி தனது முதல் கோல் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது.

சிறந்த ஆட்டம்

சிறந்த ஆட்டம்

பின்னர் யுவண்டஸ் அணி மீண்டும் களத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் கைமேல் பலன் கிட்டியது. ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் அந்த அணி வீரர் எம்ரே கேன், 2வது கோலை அடித்து மிரட்டினார். அத்தோடு... முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

களத்தில் 10 வீரர்கள்

களத்தில் 10 வீரர்கள்

2ம் பாதி தொடங்கியவுடனே யுவண்டஸ் அணி வீரர் பைஜாமிக் ரெட் கார்டு வாங்கினார். அதனால், இரு அணி வீரர்களும் 10 வீரர்களுடனே ஆட்டத்தை தொடர்ந்தது.

பெனால்டி வாய்ப்பு

பெனால்டி வாய்ப்பு

61வது நிமிடத்தில் நபோலி அணி வீரர் ஜோசே முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நபோலி அணிக்கு பெனால்டி கிடைத்தது. நபோலி அணி சார்பில் அந்த அணி வீரர் இன்சிக்னி அடித்த பந்து கோலின் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்றது. இதன் விளைவாக நபோலி அணி ஆட்டத்தின் இறுதியில் 1க்கு 2 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.

23 ஆட்டங்களில் வெற்றி

23 ஆட்டங்களில் வெற்றி

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் யுவண்டஸ் அணி இந்த தொடரில் விளையாடிய 26 போட்டிகளில் 23 வெற்றி, மூன்று டிரா என 72 புள்ளிகள் பெற்று தோல்வியற்ற அணியாக திகழ்கிறது. அடுத்தப்படியாக, நபோலி அணி 26 போட்டிகளில் 17 வெற்றி, 5டிரா, ஏழு தோல்வி என 56 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

யுவண்டஸ் முதலிடம்

யுவண்டஸ் முதலிடம்

இதன்மூலம், 16 புள்ளிகள் வித்தியாசத்தில் யுவண்டஸ் அணி முதலிடத்தில் உள்ளது. எனவே, 35வது முறையாக சீரி ஏ கோப்பையை வெல்லும் வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாகியுள்ளது.

Story first published: Monday, March 4, 2019, 18:38 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
Champions Juventus took a huge step towards retaining the Serie A title by beating second-placed Napoli, with both sides reduced to 10 men.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X