ரொனால்ட்டோ - மெஸ்ஸி மோதல்.. எதிர்பார்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஆப்பு.. சாம்பியன்ஸ் லீக்-ல் குழப்பம்

சென்னை: ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதிய நிலையில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடக்கவுள்ளது.

ரவுண்ட் ஆஃப் 16 எனப்படும் இந்த சுற்றின் முடிவில் 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டு காலிறுதிக்கு முன்னேறவுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் தொடரை பொறுத்தவரையில் எந்தெந்த அணிகள் மோதிக்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அப்படி இந்த Round of 16 சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லியோனல் மெஸ்ஸியின் பிஎஸ்ஜி அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இரு பெரும் முன்னணி வீரர்களின் அணிகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் ஏழுந்துள்ளது. முதலில் மான்செஸ்ட் அணி, விலாரீல் அணியுடன் தான் மோதவது போன்று குலுக்கலில் வந்தது. பின்னர் அந்த 2 அணியும் லீக் சுற்றில் ஒரே குரூப்பில் விளையாடியதால் நிராகரிக்கப்பட்டு 2வது முறை எடுக்கப்பட்ட குலுக்கலில் தான் இந்த முடிவு வந்தது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அதற்கெல்லாம் பெரும் ஆப்பு ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடத்தப்பட்ட குலுக்கலில் சில தொழில் நுட்ப கோளாறுகள் இருந்திருப்பதாகவும், அதன் முடிவுகள் தவறாக வந்ததாகவும், யுஈஎஃப்ஏ அறிவித்துள்ளது. இதனால் இந்த முடிவுகள் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Champions League draw of Cristiano Ronaldo vs Lionel Messi match has been declared void
Story first published: Monday, December 13, 2021, 18:46 [IST]
Other articles published on Dec 13, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X