For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

சென்னையின் அணி ரொம்ப ஆபத்தானது... நிறைய நல்ல பிளேயர்ஸ் இருக்காங்க... மார்க்வெஸ் கவலை

பேம்போலிம் : கோவாவின் பேம்போலிம்மில் ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 47வது போட்டி நாளைய தினம் நடைபெறவுள்ளது.

இதில் சென்னையின் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

ஜெயிக்க முடியலை.. அதுக்காக இப்படியா பண்ணுவீங்க? இந்திய வீரர்களை சீண்டிய ஆஸி. மீடியா!ஜெயிக்க முடியலை.. அதுக்காக இப்படியா பண்ணுவீங்க? இந்திய வீரர்களை சீண்டிய ஆஸி. மீடியா!

இந்நிலையில் சென்னையின் அணி மிகவும் ஆபத்தானது என்றும் அதில் நல்ல வீரர்கள் பலர் இருப்பதாகவும் ஐதராபாத் அணியின் கோச் மார்க்வெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

47வது போட்டி

47வது போட்டி

ஐஎஸ்எல் 2020-21 தொடர் கோவாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 47வது போட்டி நாளைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னையின் எப்சி மற்றும் ஐதராபாத் எப்சி அணிகள் மோதவுள்ளன.

93 வாய்ப்புகளை இழந்த சென்னையின்

93 வாய்ப்புகளை இழந்த சென்னையின்

ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ள சென்னையின் எப்சி அணி கோல் போடும் பல சந்தர்ப்பங்களை இந்த தொடரில் இழந்துள்ளது. கோச் சிசாபா லாஸ்லோ தலைமையிலான சென்னையின் அணி இதுவரை இந்த தொடரில் கோல் அடிக்கும் 93 வாய்ப்புகளை இழந்துள்ளது.

சென்னையின் கோச் விளக்கம்

சென்னையின் கோச் விளக்கம்

இந்நிலையில் புட்பால் விளையாடுவது உளவியல்பூர்மானது என்று அந்த அணியின் கோச் லாஸ்லோ தெரிவித்துள்ளார். உளப்பூர்வமாகவும் உடலளவிலும் சிறப்பாக இருக்க வேண்டியது இந்த போட்டிக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள லாஸ்லோ, கடந்த சீசனில் நெரிஜூஸ் போன்ற வீரர்கள் இருந்த நிலையில் தற்போது அவர்கள் இல்லாததை சுட்டிக் காட்டியுள்ளார்.

கால அவகாசம் தேவை

கால அவகாசம் தேவை

அதனால் அவர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை அணியின் மற்ற வீரர்களிடம் வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும், ஐஎஸ்எல் போட்டிகளில் இதுவரை விளையாடியிருக்காத வீரர்களுக்கும் அழுத்தம் அளிக்க வேண்டியது உள்ளதாகவும் கூறினார். இதையெல்லாம் ஒருங்கிணைத்து சிறப்பான அணியை உருவாக்க நேரம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறப்பான வீரர்கள் உள்ளனர்

சிறப்பான வீரர்கள் உள்ளனர்

இதனிடையே, சென்னையின் அணி மிகவும் ஆபத்தானது என்றும் அதில் தாப்பா உள்ளிட்ட சிறப்பான பல வீரர்கள் உள்ளதாகவும் ஐதராபாத் அணியின் கோச் மார்க்வெஸ் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையின் மற்றும் ஐதராபாத் அணிகள் பட்டியலில் பெற்றுள்ள புள்ளிகளை காட்டிலும் அதிக புள்ளைகளை பெறும் அளவிற்கு தகுதியான அணிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Story first published: Sunday, January 3, 2021, 18:29 [IST]
Other articles published on Jan 3, 2021
English summary
Chennaiyin and Hyderabad deserve more points than we have on the table -said Marquez
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X