For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"பச்சப் புள்ளை"யிடம் போய் வீரத்தைக் காட்டிய மெஸ்ஸி.. பனாமாவுக்கு எதிராக "ஹாட்ரிக்" உதை!

சிகாகோ: அர்ஜென்டினாவின் சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி ஒரு வழியாக பார்முக்கு வந்து விட்டார். பனாமாவுக்கு எதிராக நடந்த கோபா அமெரிக்காப் போட்டியில் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார். மொத்தமாக 5-0 என்ற கணக்கில் அர்ஜென்டினா வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

மெஸ்ஸி அடித்த 3 கோல்களும் 19 நிமிடத்திற்குள் விழுந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினாவுக்காக அதிக கோல்கள் போடுவதில்லை என்ற பெரும் குறையை நேற்றைய ஹாட்ரிக் மூலம் சற்று தணித்துள்ளார் மெஸ்ஸி.

இருப்பினும் குட்டி அணிக்கு எதிராக மெஸ்ஸி பொங்கியதுதான் ரசிகர்களுக்கு பூரண திருப்தியைத் தரவில்லை. காயம் காரணமாக அர்ஜென்டினாவின் முதல் போட்டியில் மெஸ்ஸி விளையாடவில்லை. நேற்றும் கூட மாற்று ஆட்டக்காரராகவே அவர் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

61வது நிமிடத்தில் நுழைந்து

61வது நிமிடத்தில் நுழைந்து

ஆட்டத்தின் 61வது நிமிடத்தில்தான் மைதானத்திற்குள் புகுந்தார் மெஸ்ஸி. நுழைந்த வேகத்தில் புயலாக மாறி பந்தை கோல்களாக மாற்றத் தொடங்கி விட்டார். மெஸ்ஸி மைதானத்திற்குள் வந்தபோது அர்ஜென்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தது.

68வது நிமிடத்தில் முதல் கோல்

68வது நிமிடத்தில் முதல் கோல்

68வது நிமிடத்தில மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார். அடுத்து 78வது நிமிடத்தில் அடுத்த கோல் விழுந்தது. அடுத்து 86வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்தார் மெஸ்ஸி.

90வது நிமிடத்தில்

90வது நிமிடத்தில்

ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் செர்ஜியோ அகுரோ (இவரும் மாற்று வீரராக களம் இறங்கினார்) அர்ஜென்டினா அணியின் 5வது கோலை அடித்தார். ஆட்டம் 5-0 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. முன்னதாக முதல் கோலை நிக்கோலஸ் ஓடமென்டி அடித்திருந்தார். ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே அவர் கோலடித்தார்.

2வது வெற்றி

2வது வெற்றி

தனது முதல் போட்டியில் சிலி அணியை 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது. நேற்று தனது 2வது போட்டியில் பனாமாவைத் தூக்கிப் போட்டு உதைத்தது. இதையடுத்து அந்த அணிக்கு காலிறுதிக்கான வாய்ப்பு பிரகாசமாகி விட்டது.

மாரடோனாவுக்குப் பதிலடி

மாரடோனாவுக்குப் பதிலடி

அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான மாரடோனா நேற்று முன்தினம்தான், மெஸ்ஸி கேப்டனுக்குரிய தகுதியுடன் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அதிரடியாக ஆடி 3 கோல்கள் அடித்துக் கலக்கி விட்டார் மெஸ்ஸி. என்ன, பனாமா போன்ற சாதாரண அணியிடம் அவர் வீரத்தைக் காட்டி விட்டார் என்பது மட்டும்தான் ரசிகர்களின் ஒரே ஏமாற்றமாகும்.

அர்ஜென்டினாவுக்காக 53 கோல்கள்

அர்ஜென்டினாவுக்காக 53 கோல்கள்

நேற்று போட்ட 3 கோல்களுடன் இதுவரை அர்ஜென்டினா அணிக்காக அவர் போட்ட கோல்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸி 109 போட்டிகளில் ஆடி இந்த 53 கோல்களை அடித்துள்ளார்.

Story first published: Sunday, June 12, 2016, 11:06 [IST]
Other articles published on Jun 12, 2016
English summary
Lionel Messi scored a magical hat-trick in 19 minutes as Argentina cruised into the Copa America Centenario quarter-finals with a 5-0 rout of Panama on Friday (June 10). Messi had been forced to delay his debut in the tournament after a slow recovery from a lower back injury, with Argentina coach Gerardo Martino surprisingly naming him amongst the substitutes once more.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X