பணியாளருக்காக துடித்துப்போன ரொனால்டோ.. போட்டியின் போது எதிர்பாராத நிகழ்வு.. மனங்களை வென்ற தருணம்!

சென்னை: பயிற்சி போட்டியின் போது, பெண் பணியாளருக்காக கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ செய்த விஷயம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தாண்டு கால்பந்து உலகில் மிகப்பெரும் ஆச்சரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலகிய ஒரு சில நாட்களில் சத்தமே இல்லாமல் ரொனால்டோவின் செய்தியும் ஆச்சரியம் அளித்தது.

அதாவது, அவர் யாருமே எதிர்பார்க்காத வகையில் மீண்டும் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு திரும்பினார். இந்த அணிக்காக விளையாடிய போட்டி ஒன்றில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் தொடருக்காக அனைத்து கால்பந்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதற்காக கிறிஸ்டினோ ரொனால்டோவின் அணியான மான்செஸ்ட் யுனைடெட் -ம் பிஎஸ்சி யங் பாய்ஸ் அணிக்கும் பயிற்சி போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இது பயிற்சி போன்று போல இல்லாமல் மிகவும் பரபரப்பாக சென்றது. இறுதியில் யங் பாய்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோ அணியினை வீழ்த்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிறிஸ்டினோ ரொனால்டோ கோல் போஸ்டை நோக்கி மிக ஆக்ரோஷமாக அடித்த பந்து தவறுதலாக, களத்திற்கு வெளியில் இருந்த பெண் பணியாளர் தலையில் பட்டது. இதனால் அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து மருத்துவக் குழு அவரை சூழ்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி ஐபில்: கோலியின் ரெக்கார்டையே முறியடிக்கும் வீரர்.. நிச்சயம் 2 - 3 சதங்களை அடிப்பார்.. கம்பீர் உறுதி

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் களத்தை விட்டு வெளியேறி அந்த பெண்ணை நோக்கிச் சென்ற ரொனால்டோ, மருத்தவர்களிடம் அவரின் நிலை குறித்து விசாரித்தார். பின்னர் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியது மட்டுமல்லாமல் தனது ஜெர்ஸியையும் அன்பளிப்பாக தருவதாக உறுதியளித்தார். அவர் கூறியபடியே ரொனால்டோ அணிந்த ஜெர்ஸி ஒன்று அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த அந்த பெண் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Cristiano Ronaldo poleaxed a steward after hitted her in the head
Story first published: Thursday, September 16, 2021, 19:21 [IST]
Other articles published on Sep 16, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X