For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

நாங்க அதுக்கெல்லாம் லாயக்கே இல்லை … ரொனால்டோ விரக்திப் பேச்சு

மனாஸ், பிரேசில்: உலகக் கோப்பையை வெல்லும் தகுதியில் எனது போர்ச்சுகல் அணி இல்லை. நாங்கள் இந்த தொடரில் பிளாப் ஆகி விட்டோம் என்று கூறியுள்ளார் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் 2-2 என்ற கணக்கில் போர்ச்சுகல் டிரா செய்த பின்னர் இப்படித் தெரிவித்தார் ரொனால்டோ.

போர்ச்சுகல் அணி தனது முதல் போட்டியில், 0-4 என்ற கணக்கில் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தது. 2வது போட்டி டிராவாகி விட்ட நிலையில் அடுத்து கானாவுடன் நடக்கவுள்ள கடைசிப் போட்டியில் அது வென்றாக வேண்டும். அப்போதுதான் ரவுண்ட் 16 குறித்து கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க முடியும்.

நாங்க சரியில்லை

நாங்க சரியில்லை

ஆனால் ரொனால்டோவுக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை இல்லை என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. தனது அணியின் ஆட்டம் குறித்து அவர் கூறுகையில், நாங்கள் கோப்பையை வெல்லும் தகுதியுடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

நாங்கள் உலகக் கோப்பையைக் கையில் ஏந்துவோம் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நாங்கள் ஒருபோதும் பேவரைட்டாகவே இருந்ததில்லை.

எங்க நிலைமை இதுதான்

எங்க நிலைமை இதுதான்

நாங்கள் வெல்லும் வாய்ப்பில்லை. அதுதான் உண்மை. அதை நாங்கள் உணர வேண்டும்.

எங்களை விட பெஸ்ட் உள்ளனர்

எங்களை விட பெஸ்ட் உள்ளனர்

தற்போதைய நிமிடத்தில் எங்களை விட சிறந்த அணிகள் உள்ளன. எங்களை விடச் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஏண்டா வந்தோம்னு இருக்கு

ஏண்டா வந்தோம்னு இருக்கு

ஏன் இங்கு விளையாட வந்தோம் என்று எனக்குத் தோன்றுகிறது. சற்று விரக்தியாகவே உள்ளது. எனது உடல் தகுதியிலும் எனக்குத் திருப்தி இல்லை. இருப்பினும் எனது நாட்டின் விருப்பத்திற்கு மதிப்பளித்தே இங்கு நான் விளையாட வந்துள்ளேன் என்றார் ரொனால்டோ.

விட்டுக் கொடுக்காத பயிற்சியாளர்

விட்டுக் கொடுக்காத பயிற்சியாளர்

ஆனால் போர்ச்சுகல் பயிற்சியாளரோ, ரொனால்டோவை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார். பிரச்சினை அவரிடம் இல்லை. அவர் முழு நேரத்திலும் விளையாடுகிறார். மற்ற வீரர்களிடம்தான் பிரச்சினை உள்ளது என்பது அவரது வாதம்.

ஒரு வேளை கோஷ்டிப் பூசல் ஏதும் தலைவிரித்தாடுகிறதோ...??

Story first published: Tuesday, June 24, 2014, 10:49 [IST]
Other articles published on Jun 24, 2014
English summary
Portugal are not good enough to win the World Cup their world footballer of the year Cristiano Ronaldo admitted after Sunday's thrilling 2-2 draw with the United States. The 29-year-old Real Madrid superstar -- whose fitness has been a hot source of debate -- kept his country's slim hopes of reaching the second round alive with a sublime cross which was headed home by Silvestre Varela in the dying seconds of time added on.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X