For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

அய்யோ போச்சே போச்சே..... புலம்பும் குரேஷியா கால்பந்து வீரர்!

மாற்று வீரராக களமிறங்க மறுத்ததால், நாடு திருப்பி அனுப்பப்பட்ட குரேஷிய வீரர் நிகோலா காலினிக், தற்போது புலம்பி வருகிறார்.

மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து பைனலில் குரேஷியா விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் நிகோலா காலினிக், புலம்புகிறார்.

21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டியின் அரை இறுதியில் இங்கிலாந்தை வென்று முதல் முறையாக பைனல் நுழைந்தது குரேஷியா.

croatian player kalinic dejected

குரேஷியாவில் மிகப் பெரிய நகரம் முதல், குட்டி சந்து வரை கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால், குரேஷிய கால்பந்து வீரர் நிகோலா காலினிக் மட்டுமே, ஐயோ போச்சே, போச்சே என்று புலம்பி வருகிறார்.

உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் நைஜீரியாவை சந்தித்தது குரேஷியா. ஏசி மிலன் அணிக்காக விளையாடி வரும் காலினிக் அந்த ஆட்டத்தில் களமிறங்கிய 11 பேரில் இல்லை.

அணியின் முக்கிய அதிரடி வீரரான மரியோ மண்ட்ஜூகிக்குக்கு மாற்று வீரராக காலினிக் இருந்தார். அந்த ஆட்டத்தில் இடையில், மாற்று வீரராக இறங்கும்படி, காலினிக்கை கோச் கேட்டார். ஆனால் முதுகு வலி அதனால் இறங்க முடியாது என்று காலினிக் மறுத்துவிட்டார்.

முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின்போதும், இவ்வாறு அவர் நடந்து கொண்டார். அதனால், அவர் குரேஷியாவுக்கு திரும்பி அனுப்பப்பட்டார்.

தற்போது குரேஷியா பைனல் வரை நுழைந்துள்ள நிலையில், அணிக்காக விளையாடிய பெருமையை அவர் இழந்துள்ளார். இதுதான் அவருடைய புலம்பலுக்கு காரணம்.

Story first published: Friday, July 13, 2018, 14:24 [IST]
Other articles published on Jul 13, 2018
English summary
Croatian player kalinic not defected for not being in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X