For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

தம்பி என்னப்பா சொல்ற.. அள்ளிப் போட்டு வந்தியா.. அசரடித்த டக்ளஸ்.. இதுதான்யா மனசுங்கிறது!

பிரேசிலியா: ஜூவன்டஸ் அணிக்காக ஆடி வரும் கால்பந்து வீரர் டக்ளஸ் காஸ்டா தனது கார் நிறைய பல்வேறு உதவிப் பொருட்களை எடுத்துக் கொண்டு பிரேசிலுக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து உதவியுள்ளார்.

Recommended Video

ரசிகர்கள் இல்லாம டி20 தொடர் நினைச்சு பார்க்கக்கூட முடியல - ஆலன் பார்டர்

ஜூவன்டஸ் அணிக்காக ஆடி வருபவர் டக்ளஸ் காஸ்டா. இவர் தனது நாடான பிரேசிலுக்குச் செல்ல விரும்பி அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற அணி நிர்வாகம் செல்ல அனுமதித்தது.

இதையடுத்து தனது தாயார் மார்லின் காஸ்டா டிசவுசா, காதலி நதாலியா பெலிக்ஸ் ஆகியோருடன் காரில் கிளம்பினார். இதன் பிறகுதான் விஷயமே ஆரம்பிக்கிறது.

கொரோனாவின் பிடியில் பிரேசில்

கொரோனாவின் பிடியில் பிரேசில்

பிரேசில் நாட்டிலும் கொரோனாவைரஸ் தலைவிரித்தாடி வருகிறது. அங்கு இதுவரை 688 பேர் உயிரிழந்துள்ளனர். 15,000 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த நாட்டு அரசும் நம்மைப் போலவே திணறி வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பிரலபங்களும் பிரேசில் அரசுக்கு உதவி வருகின்றனர்.

டக்ளஸின் அன்பு மனசு

டக்ளஸின் அன்பு மனசு

அந்த வகையில் டக்ளஸ் காஸ்டோவும் உதவ விரும்பினார். இதையடுத்து ஜுவன்டஸ் அணியிடம் அனுமதி பெற்று பிரேசிலுக்குக் கிளம்பினார். அவருடன் தாயாரும், காதலியும் வருவதாக சொன்னதால் அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டார். அதன் பின்னர் கார் நிறைய பல்வேறு பொருட்களை அள்ளிப் போட்டுக் கொண்டு மூன்று பேரும் கிளம்பினர்.

தாய், காதலியுடன் பயணம்

தாய், காதலியுடன் பயணம்

பிரேசிலுக்கு வந்து சேர்ந்ததும் தாயும் மகனும் மற்றும் காதலியுமாக கொரோனாவைரஸ் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்த உதவிப் பொருட்களை விநியோகித்துள்ளனர். இது பெரும் மனநிறைவு கொடுப்பதாக காஸ்டா கூறியுள்ளார். மேலும் தன்னுடன் சேர்ந்து தனது தாயாரும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இதை விட தனது காதலி இந்த நல்ல காரியத்தில் தனக்கு துணை நின்றதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வீரர்கள் திரும்புகிறார்கள்

இவர் மட்டுமல்ல மேலும் பலரும் கூட இதுபோல உதவி வருகின்றனர். தற்போது இத்தாலி மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் கால்பந்துப் போட்டிகள் ரத்தாகியுள்ளன. இதனால் பல வீரர்கள் அந்தந்த நாடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களில் பலர் தங்களது கிளப் அனுமதியுடன் தாயகம் திரும்பி வருகின்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ, காஸ்டா, கான்சாலோ ஹிகுவன், சமி கெதிரா என பலரும் அதில் அடக்கம்.

Story first published: Wednesday, April 15, 2020, 10:56 [IST]
Other articles published on Apr 15, 2020
English summary
Brazilian Football player Douglas Costa, his Mother and Girlfriend have helped the poor in Brazil
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X