அடிதடியில் இறங்கிய இந்திய வீரர்கள்.. கலவரமான கால்பந்து மைதானம்.. ஆசிய தகுதி சுற்றில் பரபரப்பு

கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி வீரர்களும் தொடக்கம் முதலே ஆக்கோரஷமாக விளையாடியதால் போட்டியில் அனல் பறந்தது.

இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்ற கட்டத்தில் இந்திய அணி களமிறங்கியது.

தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி தருமா இந்தியா..? புதிய திட்டத்தை வகுத்துள்ள டிராவிட்.. பிளேயிங் XI இதோதென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி தருமா இந்தியா..? புதிய திட்டத்தை வகுத்துள்ள டிராவிட்.. பிளேயிங் XI இதோ

சுனில் செத்ரி கோல்

சுனில் செத்ரி கோல்

ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் இரு அணிகளுமே கோல் அடிக்காத நிலையில், விறுவிறுப்பு எகிறியது. போட்டியின் 86வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ஃபிரி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதனை, இந்திய வீரர் சுனில் செத்ரி கோலாக மாற்றினார். இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டியில் சுனில் செத்ரி 83 கோல்களை அடித்தார்.

அதிக கோல் 2வது இடம்

அதிக கோல் 2வது இடம்

தற்போது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் வீரர்களில் அதிக கோல்கள் அடித்துள்ளவர்கள் பட்டியலில் மெஸ்ஸிக்கு (86 கோல்) பிறகு சுனில் செத்ரி 2வது இடத்தை பிடித்தார்.இதன் பிறகு, ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பதில் கோல் அடிக்க, ஆட்டம் சமனை நோக்கி சென்றது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதன் பிறகு ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் இந்திய வீரர் சமத், அபாரமாக கோல் அடிக்க, இந்திய அணி 2க்கு1 என்ற கோல் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது. அப்போது இந்திய வீரர்கள் வெற்றியை கொண்டாடினர். இதனால் கடுப்பான ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை கீழே மோதி தள்ளிவிட்டனர்.

களத்தில் மோதல்

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய வீரர்கள் பதிலடியில் இறங்கினர். அப்போது இதனை தடுக்க வந்த இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரித் சிங்கை ஆப்கான் வீரர்கள் தாக்கினர். இதனால் இந்திய வீரர்கள் சுற்றி வளைத்து ஆப்கானிஸ்தான் வீரர்களை பதிலுக்கு தாக்க முயன்றதால் கால்பந்து மைதானமே போர்க்களம் போல் மாறியது. இதனையடுத்து, நடுவர்கள் வீரர்களை வந்து அமைதி படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Dramatic scence in Football match as Fight broke out between India and afghan players அடிதடியில் இறங்கிய இந்திய வீரர்கள்.. கலவரமான கால்பந்து மைதானம்.. ஆசிய தகுதி சுற்றில் பரபரப்பு
Story first published: Sunday, June 12, 2022, 13:58 [IST]
Other articles published on Jun 12, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X