மீண்டும் தலை விரித்து ஆடும் கொரோனா.. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் ரத்து..!!

லண்டன்: ஓமைக்கரான் வைரசால் கொரோனா புதிய உத்வேகம் பெற்று, உலகம் முழுவதும் பரவி வருகிறது

தற்போது இங்கிலாந்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.

“இன்னும் 6 விக்கெட்கள் தான்”.. அஸ்வினுக்கு காத்திருக்கும் பிரமாண்ட சாதனை.. முதல் இந்தியரே அவர்தானாம்“இன்னும் 6 விக்கெட்கள் தான்”.. அஸ்வினுக்கு காத்திருக்கும் பிரமாண்ட சாதனை.. முதல் இந்தியரே அவர்தானாம்

இதனால் மருத்துவமனைகளும் மீண்டும் நிரம்பி வருகின்றன. தடுப்பூசியையும் தாண்டி கொரோனா பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

வீரர்களுக்கு கொரோனா

வீரர்களுக்கு கொரோனா

இந்த நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்புள்ள இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பல அணி வீரர்களுக்கு கொத்து கொத்தாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

விளையாட மறுப்பு

விளையாட மறுப்பு

நிலைமையை சமாளித்து இரண்டாம் தர வீரர்களுடன் சில அணிகள் விளையாடின. ஆனால் போட்டியை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் கொரோனா பரவியது. தற்போது பல அணி வீரர்களுக்கும் கொரோனா பரவியதால், சிலர் போட்டியில் ஆட மறுப்பு தெரிவித்துள்ளனர்.

போட்டிகள் ரத்து

போட்டிகள் ரத்து

இதனையடுத்து, வார இறுதிகளில் நடைபெற இருந்த 9 லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரீமியர் லீக் போட்டிகளை 2 மாதம் வரை நிறுத்த வேண்டும் என்று அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளன. வீரர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து செல்ல முடியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மீண்டும் கொரோனாவால் விளையாட்டு உலகம் பாதிக்கப்படுகிறது

கிரிக்கெட் ரத்து

கிரிக்கெட் ரத்து

ஏற்கனவே பாகிஸ்தானில் நடைபெற்று வந்த இருபது ஓவர் சர்வதேச போட்டியையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடரில் பாட் கம்மின்ஸ் கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்ததால் அவரும் அடிலெய்ட் டெஸ்டில் பங்கேற்கவில்லை.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
English premier League matches called off due to corona cases in England.மீண்டும் தலை விரித்தும் ஆடும் கொரோனா.. இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் ரத்து
Story first published: Friday, December 17, 2021, 21:51 [IST]
Other articles published on Dec 17, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X