For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ரசிகர்கள் வன்முறை... ரஷ்ய அணிக்கு அபராதம் விதித்தது ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம்!

பாரிஸ்: யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டியின்போது ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தில் ரஷ்ய அணிக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் அபராதம் விதித்துள்ளது. ரசிகர்களின் வன்முறை தொடர்ந்தால் போட்டித் தொடரிலிருந்து ரஷ்யா தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்சில் யூரோ கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரஷ்யா - இங்கிலாந்து இடையிலான போட்டி சனிக்கிழமை மார்செல் நகரில் நடந்தது. அப்போட்டியின்போது ரசிகர்களிடையே பெரும் வன்முறை வெடித்தது. இரு நாட்டு ரசிகர்களும் மிக மோசமாக நடந்து கொண்டனர். இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மைதானத்திற்கு வெளியிலும் இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பெரும் வன்முறைக் களமாக மாறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Euro 2016: Russia fined, to be disqualified if more stadium violence

இந்த வன்முறைக்கு ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தது. இந்த நிலையில் சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில் ரஷ்ய கால்பந்து அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இனியும் ரஷ்ய ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டால் போட்டித் தொடரை விட்டு ரஷ்ய அணி நீக்கப்படும் என்றும் சம்மேளனம் எச்சரித்துள்ளது.

ரஷ்ய அணிக்கு இன்னும் 2 சுற்றுப் போட்டிகள் உள்ளன. நாளை லில்லி நகரில் ஸ்லோவேக்கியா அணியுடனும், திங்கள்கிழமை டூலோஸ் நகரில் வேல்ஸ் அணியுடனும் மோதவுள்ளது ரஷ்யா. எனவே இந்தப் போட்டிகளில் ரஷ்ய ரசிகர்கள் அமைதியாக இருந்தால் அந்த அணி தப்பும். இல்லாவிட்டால் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ரஷ்ய அணிக்கு தற்போது 1 லட்சத்து 69 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் செய்த தொந்தரவு, இன ரீதியான தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், பட்டாசு வெடித்தல் போன்றவற்றுக்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, June 14, 2016, 18:11 [IST]
Other articles published on Jun 14, 2016
English summary
Russia will be disqualified from the European Championship (Euro 2016) if there is more violence by their fans inside stadiums in France. UEFA sent the message today in a disciplinary panel ruling to punish disorder at the team's opening match against England.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X