For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

“இப்படியா அவமாரியதை செய்வது” சுனில் சேத்ரியிடம் இல கணேசன் செய்த விஷயம்.. இணையத்தில் வெடித்த சர்ச்சை

கொல்கத்தா: இந்திய கால்பந்து சூப்பர் ஸ்டார் சுனில் சேத்ரி, மேற்குவங்க ஆளுநரால் அவமரியாதையாக நடத்தப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஆசியாவின் மிகப்பிரபலமான மற்றும் பழமையான கால்பந்து தொடர் டுராண்ட் கோப்பையாகும்.

நடப்பாண்டு தொடரின் இறுதிப்போட்டியில் நேற்று மும்பை சிட்டி எஃப்சி மற்றும் பெங்களூரு எஃப்சி அணிகள் மோதின.

“என்ன ஆனாலும் அதை மாற்றிக்கொள்ளவே மாட்டோம்”.. இந்திய அணியின் அடுத்த நடவடிக்கை.. ரோகித் சர்மா பளீச்! “என்ன ஆனாலும் அதை மாற்றிக்கொள்ளவே மாட்டோம்”.. இந்திய அணியின் அடுத்த நடவடிக்கை.. ரோகித் சர்மா பளீச்!

டுராண்ட் கால்பந்து தொடர்

டுராண்ட் கால்பந்து தொடர்

பரபரப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்ற இந்த போட்டியில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. இதுமட்டுமல்லாமல் கோப்பையையும் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இருந்த சுனில் சேத்ரி கோப்பையை வாங்கும் சமயத்தில் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டார்.

 புது சர்ச்சை

புது சர்ச்சை

போட்டிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் ஒன்றாக இணைந்து சுனில் சேத்ரியிடம் கோப்பையை வழங்கினர். அப்போது புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக அனைவரும் இருந்த இடத்தில் அனுசரித்து நின்றனர். ஆனால் புகைப்படத்தில் மிக முக்கியமாக இடம்பெற வேண்டிய நபரும் அவர்தான் ஆகும். ஆனால் அவரே கடைசியில் ஒதுக்கப்பட்டார்.

என்னதான் நடந்தது

என்னதான் நடந்தது

மேற்குவங்க மாநில ஆளுநர் இல.கணேசன், தான் புகைப்படத்தில் நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காக, கேப்டன் சுனில் சேத்ரியை கையை வைத்து தள்ளினார். இதனால் இரு கைகளால் கூட கோப்பையை பெற முடியாமல் அவர், விரல் படும்படி நின்றுக்கொண்டு கோப்பையை பெறுக்கொண்டார். இல.கணேசனின் இந்த செயல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் கோபம்

இந்தியாவின் முன்னணி விளையாட்டு வீரரை, ஒரு புகைப்படத்திற்காக இப்படியா ஒதுக்கி வைப்பது, அவர் தானே அந்த விழாவின் நாயகன். ஆளுநர் இப்படி செய்தது தவறு எனக்கூறி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மேலும் இந்திய அளவிலும் இந்த சர்ச்சை ட்ரெண்டிங்கில் உள்ளது.

Story first published: Monday, September 19, 2022, 18:44 [IST]
Other articles published on Sep 19, 2022
English summary
Fans Got anger on West bengal Governor La Ganeshan for Pushing Sunil Chhetri to Pose With Durand Trophy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X