For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

திடீரென பிரபலமாகும் பாண்டிங் ட்ரீட்மெண்ட்.. சுனில் சேத்ரிக்கு நடந்த அவமரியாதை.. காரணம் என்ன தெரியுமா

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் இல கணேசனுக்கு ரிக்கிப் பாண்டிங்கின் ஸ்டைலில் பதிலடி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Recommended Video

Durand Cup 2022 கோப்பையை வழங்கும்போது Sunil Chhetriயை தள்ளிவிட்ட மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன்!

இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி டுராண்ட் கோப்பை தொடரில் அவமரியாதையாக நடத்தப்பட்டது தான் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

டுராண்ட் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று மும்பை எஃப்சி அணியை சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எஃப்சி அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.

“இப்படியா அவமாரியதை செய்வது” சுனில் சேத்ரியிடம் இல கணேசன் செய்த விஷயம்.. இணையத்தில் வெடித்த சர்ச்சை“இப்படியா அவமாரியதை செய்வது” சுனில் சேத்ரியிடம் இல கணேசன் செய்த விஷயம்.. இணையத்தில் வெடித்த சர்ச்சை

டுராண்ட் கால்பந்து தொடர்

டுராண்ட் கால்பந்து தொடர்

கேப்டன் சுனில் சேத்ரியிடம் கோப்பையை வழங்குவதற்காக முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து நின்றனர். அப்போது அங்கிருந்த மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசன், புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக சுனில் சேத்ரியை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு, அவர் நின்றுக்கொண்டார். இதனால் முன் நின்று கோப்பையை பெற வேண்டிய சுனில் சேத்ரி, ஓரமாக நின்று பெற்றுக்கொண்டார்.

புது சர்ச்சை

புது சர்ச்சை

இந்தியாவின் முன்னணி கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை ஒரு புகைப்படத்திற்காக இப்படியா ஒதுக்கிவைத்துவிட்டு நிற்பது என இல. கணேசன் குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேல் சென்று ரிக்கிப்பாண்டிங் ட்ரீட்மெண்ட்-ஐ இந்தியாவிலும் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

அப்படி என்ன நடந்தது

2006ம் ஆண்டு மும்பையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்த இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவார் கோப்பையை வழங்க சென்றார். ஆனால் கேப்டன் ரிக்கிப்பாண்டிங், சரத் பவாரை அழைத்து சீக்கிரம் கோப்பையை கொடுங்கள், கொடுத்துவிட்டு வெளியேறுங்கள் எனக்கூறினார். இதுமட்டுமல்லாமல் கோப்பையை வென்றவுடன், ஆஸ்திரேலிய வீரர்கள் ஒன்று சேர்ந்து சரத் பவாரை தள்ளி வெளியேற்றினர்.

மீண்டும் அதே விஷயம்

அந்த சமயத்தில் இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. எனினும் காலப்போக்கில் ரசிகர்கள் மறந்தனர். ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை கொடுக்க, மீண்டும் ரிக்கிப்பாண்டிங் செய்ததையே செய்ய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Monday, September 19, 2022, 19:13 [IST]
Other articles published on Sep 19, 2022
English summary
Fans wants Ricky ponting treatment in Sunil Chhetri - West Bengal Governor La Ganesan Iyer Controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X