வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!

படோர்டா : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 62வது போட்டி இன்றைய தினம் படோர்டாவின் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம் 2வது இடத்தை பிடிக்க கோவா அணியும் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள மோஹுன் பகன் அணியும் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆஸ்திரேலிய வீரர்கள் என்னையும் சீண்டினாங்க... நான் வாயே திறக்கலை... தாக்கூர் பரபர!

கடுமையான போட்டி

கடுமையான போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 62வது போட்டி கோவாவின் படோர்டாவில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. இந்த இரு அணிகளும் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 2வது மற்றும் 3வது இடங்களில் வலுவாக இடம்பெற்றுள்ள நிலையில் இன்றைய ஆட்டம் கடுமையானதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 புள்ளிகளுடன் 3வது இடம்

18 புள்ளிகளுடன் 3வது இடம்

இன்றைய போட்டியின்மூலம் 3வது இடத்தில் உள்ள கோவா அணி 2வது இடத்திற்கு முன்னேற தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை ஆடியுள்ள 11 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்று இந்த அணி சிறப்பான நிலையில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக 3க்கு 0 என்ற கோல் கணக்கில் பெற்றுள்ள வெற்றி கோவா அணிக்கு புத்துணர்ச்சியை தந்துள்ள நிலையில் இன்றைய போட்டியை அந்த அணி எதிர்கொள்ளவுள்ளது.

20 புள்ளிகளுடன் 2வது இடம்

20 புள்ளிகளுடன் 2வது இடம்

இதனிடையே, 10 போட்டிகளில் விளையாடி 20 புள்ளிகளுடன் மும்பை சிட்டி அணிக்கு அடுத்ததாக 2வது இடத்தில் உள்ளது மோஹுன் பகன் அணி. ஆனால் மும்பை சிட்டியுடன் கடந்த திங்கட்கிழமை மோதிய போட்டியில் பெற்ற தோல்வியுடன் இந்த போட்டியை மோஹுன் பகன் எதிர்கொள்ளவுள்ளது.

பரபரப்பான ஆட்டம்

பரபரப்பான ஆட்டம்

இதையடுத்து படோர்டாவில் இன்றைய தினம் இந்த இரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாக, ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த போட்டியை சோனி 10 நெட்வொர்க்கில் நேரடியாக பார்க்கலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
ATK Mohun Bagan lost to table-toppers Mumbai City FC in their last outing on Monday
Story first published: Sunday, January 17, 2021, 19:01 [IST]
Other articles published on Jan 17, 2021
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X