For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்தில் இந்தியாவுக்கு தடை.. தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு இடம் உண்டா..FIFA வெளியிட்ட பட்டியல்

மும்பை: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு FIFA (உலக கால்பந்து சம்மேளனம்) கடந்த வாரம் தடை விதித்தது.

Recommended Video

Football Politics | இந்திய கால்பந்து கூட்டமைப்பும்.. முடியாத சர்ச்சையும்..

இந்திய கால்பந்து சம்மேளனம் நடவடிக்கையில் மூன்றாவது நபர்கள் தலையிடுவதாக கூறி FIFA இந்த நடவடிக்கையை எடுத்தது.

மேலும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு முறையான தேர்தல் நடத்தப்பட்டு உரிய தலைவர்கள் பதவியேற்று தங்கள் பணியை தொடர்ந்த பிறகு தான் இந்த தடையை நீக்குவோம் என்று FIFA அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித் ஆசிய கோப்பையில் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? ஒரே இடத்துக்கு 3 வீரர்கள் போட்டி.. தலைவலியில் ரோகித்

இந்திய அணி

இந்திய அணி

இதனால் இந்திய அணி எவ்வித கால்பந்து போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடைசியாக இந்திய அணி கடந்த ஜூன் மாதத்தில் ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் தகுதி சுற்றில் பங்கேற்றனர். இதில் இந்திய அணி, கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகளுக்கு எதிராக வெற்றியும் பெற்றது.

அடுத்த போட்டிகள்?

அடுத்த போட்டிகள்?

தற்போது வரும் செப்டம்பர் மாதம் இந்திய அணி 24ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராகவும், 27ஆம் தேதி வியட்நாம்க்கு எதிராகவும் சர்வதேச போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளதால் இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை பிறகு FIFA தற்போது தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

டாப் 5 இடங்கள்

டாப் 5 இடங்கள்

இதில் இந்தியாவுக்கு இடம் கிடைக்குமா என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்தியா அதே 104வது இடத்தில் நீடிப்டபதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு தடை விதித்த பிறகும் பட்டியலில் இந்தியா பெயர் இருந்தது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் நிம்மதி கொடுத்துள்ளது. வழக்கம் போல் முதலிடத்தில் பிரேசில் அணி உள்ளது.

இரண்டாவது இடத்தில் பெல்ஜியமும் மூன்றாவது இடத்தில் அர்ஜென்டினாவும், நான்காவது இடத்தில் பிரான்சும், ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளனர்.

 அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

ஆசியாவில் முதல் அணியாக விளங்கும் ஈரான் தரவரிசை பட்டியலில் 22-வது இடத்தில் நீடிக்கிறது. இந்திய கால்பந்து சம்மேளனத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. மேலும் FIFA விதியின் படி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக வரும் 28ஆம் தேதி நடத்தப்பட இருந்த தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவின் தடை விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, August 25, 2022, 21:40 [IST]
Other articles published on Aug 25, 2022
English summary
FIFA Released world Rankings after India ban and AIFF Election updates கால்பந்தில் இந்தியாவுக்கு தடை.. தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு இடம் உண்டா..FIFA வெளியிட்ட பட்டியல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X