யு17 உலகக் கோப்பை கால்பந்து.. அரை இறுதியில் மாலி, இங்கிலாந்து!

By Staff

டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதிக்கு மாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னேறின. கானா மற்றும் அமெரிக்காவின் பயணம் முடிவுக்கு வந்தது.

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்தி வருகிறது.

இந்தியா உள்பட மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த முதல் காலிறுதி ஆட்டத்தில் கானாவை 2-1 என்ற கோல் கணக்கில் மாலி வென்றது. மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து 4-1 என அமெரிக்காவை வீழ்த்தியது.

இன்று நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் ஸ்பெயின் - ஈரான் அணிகளும், ஜெர்மனி - பிரேசில் அணிகளும் மோத உள்ளன. வரும் 25ல் அரை இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Mali, England moved to semi finals in the FIFA U17 world cup
Story first published: Sunday, October 22, 2017, 13:44 [IST]
Other articles published on Oct 22, 2017
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X