பிரேசில் அணி இல்லாமல் இதுவரை எந்த உலகக்கோப்பைத் தொடரும் நடைபெற்றதில்லை. கத்தார் உலகக்கோப்பையும் அப்படியே. பயிற்சியாளர் டைட் வழிகாட்டுதலில் பிரேசில் அணி, சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. பிரேசில் அணி ஸ்விட்சர்லாந்து, செர்பியா மற்றும் கேமரூன் அணிகள் உள்ள குரூப்பில் இடம்பெற்றுள்ளது.