For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கத்தார் ஃபிஃபா உலககோப்பையில் எதிரொலித்த திராவிட மாடல்.. ஸ்டாலின் சாதனையை கொண்டு சென்ற தமிழர்

தோஹா : உலகம் முழுவதும் அதிக மக்களால் பார்க்க கூடிய விளையாட்டு தொடர் என்றால், அது ஃபிஃபா உலககோப்பை கிரிக்கெட் தொடர் தான்.

அதன் பிறகு தான் மற்ற தொடர்கள். கிரிக்கெட் எல்லாம் நம்பர் 2வது இடத்தில் தான் இருக்கிறது. கத்தாரில் முதல் முறையாக ஃபிஃபா உலககோப்பை நடைபெற்றது.

இதற்காக பல லட்ச கோடிகளை செலவழித்தது கத்தார். சுமார் 13 லட்சம் ரசிகர்கள், இந்தப் போட்டியை நேரில் கண்டு களித்தனர்.

கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது?? கால்பந்து போட்டியால் கலவர பூமியான பெல்ஜியம்.. ஃபிஃபா உலகக்கோப்பையால் வந்த விணை.. அப்படி என்ன ஆனது??

கோலாகல தொடர்

கோலாகல தொடர்

கால்பந்து ரசிகர்கள் வெப்பத்தால் பாதிக்க கூடாது என்பதற்காக போட்டி குளிர் காலத்தில், அதுவும் இரவு நேரத்தில் நடைபெறுகிறது. மேலும் மைதானம் முழுவதும் குளிர்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. ஆடை கட்டுப்பாடு மற்றும் மதுபானத்திற்கு தடை போன்ற விசயங்களுக்கு கத்தார் தடை விதித்தாலும், மற்றபடி எந்த குறையும் இல்லாமல் கோலாகலமாக ஃபிஃபா கால்பந்து தொடர் நடைபெறுகிறது.

ஆசிய அணிகள் ஆதிக்கம்

ஆசிய அணிகள் ஆதிக்கம்

முன்பு எப்போதும் போல் இல்லாமல், இம்முறை ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை சவுதியும், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகளை ஜப்பானும் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. நேற்று அனைத்திற்கும் மேலாக போர்ச்சுகலை தென் கொரியா வீழ்த்தி 3வது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நாக்அவுட்

நாக்அவுட்

ஜெர்மனி, உருகுவே , பெல்ஜியம் போன்ற பலமான அணிகள் முதல் சுற்றிலேயே நடையை கட்டி இருப்பதால், பல எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த தொடர் நடைபெறுவதால், கத்தார் உலககோப்பை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், கத்தாரில் அதிக இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.

திராவட மாடல்

திராவட மாடல்

இதனால், தோனி, சஞ்சு சாம்சன் ஆகியோரின் பேனர்களை உலககோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் நம்மவர்கள் காட்டி வந்தனர். இந்த நிலையில், நெல்லையை சேர்ந்த இளைஞர் முகமது, STATE OF திராவிட மாடல் என்ற வாசகங்களுடன் பதாகையை எந்தி கால்பந்து போட்டியை பார்த்து இருக்கிறார்.

தமிழக இளைஞர்

தமிழக இளைஞர்

மேலும், உழவன் இல்லையே, உணவு இல்லை. உழவன் காப்போம், உயிர் நேயம் காப்போம். உழவனின் மகனாக பெருமைக் கொள்கிறேன் போன்ற வாசகங்களை அவர் ஏந்தி இருக்கிறார். திராவிட மாடல் என்ற கொள்கை ஏற்கனவே இந்தியா முழுவதும் எதிரொலித்த நிலையில், தற்போது அதனை நெல்லை இளைஞர் உலகத்திற்கு தனது பதாகை மூலம் காட்டி உள்ளார்.

Story first published: Saturday, December 3, 2022, 12:24 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
FIFA World cup 2022 - Dravida model boardings held by tamil nadu youth
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X