For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"மாப்ளே, நாம தோத்ததை விடு.. அர்ஜென்டைனா தோத்துப் போச்சாம்.. ஸ்வீட் எடு கொண்டாடு!"

ரியோ டி ஜெனீரோ: பிரேசில்காரர்கள் ரொம்பத்தான் மோசப்பா.. தாங்கள் தோற்று கேவலப்பட்டதைக் கூட சட்டென்று மறந்து விட்டார்கள். மாறாக, அர்ஜென்டைனா அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்றதை விழா போல கொண்டாடி வருகிறார்கள்.

காரணம், பிரேசில் ரசிகர்களுக்கு கால்பந்து அகராதியில் பிடிக்காத ஒரே வார்த்தை அர்ஜென்டைனா என்பதுதான்.

எப்படி கிரிக்கெட்டுக்கு இந்தியா பாகிஸ்தானோ அதேபோல கால்பந்துக்கு பிரேசில் - அர்ஜென்டைனா. இத்தனைக்கும் இருவரும் பக்கத்து பக்கத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். ஆனாலும் இரு நாட்டு ரசிகர்களுக்கும் ஆகாது. இரு அணிகளும் மோதும் போட்டி என்றாலே அது கிட்டத்தட்ட ஒரு போர் போலத்தான் படு பரபரப்பாக இருக்கும்.

இந்த நிலையில் அர்ஜென்டைனா அணி இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லாமல் மண்ணைக் கவ்வியதால் பிரசேில் ரசிகர்கள் செம குஷியாக காணப்படுகின்றனர்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

இறுதிப் போட்டியில் 0- 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் அர்ஜென்டைனா வீழ்ந்ததுமே பிரேசிலில் ரசிகர்கள் உற்சாகக் கடலில் மூழ்கி விட்டனர். ஆட்டம் பாட்டத்துடன் தெருவில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் அர்ஜென்டைனாவின் தோல்வியை.

பட்டாசு வெடித்தும்

பட்டாசு வெடித்தும்

அதேபோல பலர் பட்டாசுகளையும் சரமாரியாக வெடித்து தங்களது சோகத்தையும், ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டனராம்.

ஸ்டேடயத்திலேயே சரமாரி கொண்டாட்டம்

ஸ்டேடயத்திலேயே சரமாரி கொண்டாட்டம்

மேலும் போட்டி நடந்த ஸ்டேடியத்திலேயே கூட பலர் பட்டாசுகளை வெடித்து ஜெர்மனியின் வெற்றியையும், அர்ஜென்டைனாவின் தோல்வியையும் மந்தகாசமாக கொண்டாடியுள்ளனர்.

அழுங்கடா நல்லா அழுங்க...

அழுங்கடா நல்லா அழுங்க...

மரகானா ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாரில் குழுமியிருந்த பிரேசில் ரசிகர்கள் அர்ஜென்டைனாவே நல்லா அழு என்றும் கூக்குரலிட்டு மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனரம்.

கம்மென்று இருந்த அர்ஜென்டைனா ரசிகர்கள்

கம்மென்று இருந்த அர்ஜென்டைனா ரசிகர்கள்

இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக ரியோ டி ஜெனீரோவின் கோபா பிளாங்கா கடற்கரையில் கூடியிருந்த பல ஆயிரம் அர்ஜென்டைனா ரசிகர்கள், பிரேசில் ரசிகர்கள் செய்த சேட்டையைப் பார்த்து எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனராம்.

காப்பாத்திட்டடா சாமி....

காப்பாத்திட்டடா சாமி....

கயோ பெர்ராஸ் என்ற 45 வயது பிரேசில் ரசிகர் கூறுகையில், நல்ல வேளையாக கடவுள் ஜெர்மனியைக் காப்பாற்றி விட்டார். அர்ஜென்டைனா மட்டும் ஜெயித்திருந்தால் நான் டென்ஷனாகியிருப்பேன் என்றார். அவர்கள் ஜெயித்திருந்தால் பல வருடங்களுக்கு எங்களை கேலி செய்தே காலத்தை ஓட்டியிருப்பார்கள் என்றும் அவர் காரணம் கூறினார்.

உணர்ச்சிகரமான போட்டி

உணர்ச்சிகரமான போட்டி

கால்பந்தின் தாயகமாக கருதப்படுவது பிரேசில். அப்படிப்பட்ட நாட்டில் பரம எதிரியான அர்ஜென்டைனா வந்து கோப்பையை வென்றால் பிரேசிலியர்களுக்கு நிச்சயம் கஷ்டமாகத்தான் இருக்கும். அது நடக்காமல் போனது தாங்கள் தோற்ற வலியைக் கூட பிரேசில் ரசிகர்களுக்கு மறக்க வைத்து விட்டதாம்.

அம்புட்டு பயலுமே நம்ம பயலுக மாதிரியே இருக்காங்களே....!

Story first published: Thursday, September 11, 2014, 15:15 [IST]
Other articles published on Sep 11, 2014
English summary
Brazilians bitter about their team's disastrous World Cup celebrated Argentina's defeat to Germany in the final Sunday by dancing and launching fireworks, relieved that their arch-rivals failed to triumph on their soil. In Brasilia and Sao Paulo, fireworks exploded after Mario Goetze scored in extra-time to give the Germans a last-gasp victory at Rio de Janeiro's Maracana Stadium.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X