For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

ஒரு வழியாக ஓய்ந்தது உதை.. எண்கள் சொல்வது என்ன?

By Aravinthan R

மாஸ்கோ: பல எதிர்பார்ப்புகளை உடைத்த 2018 கால்பந்து உலகக்கோப்பை, பிரான்ஸ் அணியின் வெற்றியோடு முடிந்து விட்டது. பிரான்ஸ் நாட்டு அதிபர் முதல், இந்தியாவின் குட்டி பிரான்சான பாண்டிச்சேரி வரை பிரான்ஸ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள். க்ரோஷியா நாட்டிலும், இறுதிப் போட்டி வரை சென்ற தங்கள் நாட்டின் வீரர்களை உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள்.

பல வெற்றிகளையும், வேதனைகளையும் சந்தித்த இந்த உலகக்கோப்பையில் பல சாதனைகள், புள்ளிவிவரங்கள் மாற்றி எழுதப்பட்டுள்ளது. அதை இங்கே காண்போம்.

FIFA Worldcup 2018 Interesting facts and stats are out now


20 - பிரான்ஸ் அணி 20 ஆண்டுகள் கழித்து, உலகக்கோப்பையை வென்றுள்ளது. இந்தத் தொடரில் 14 கோல்கள் அடித்துள்ளது. பிரான்சுக்கு எதிராக 6 கோல்கள் போடப்பட்டுள்ளன.

44 - முதல் முறை உலகக்கோப்பை இறுதிக்கு நுழைந்த க்ரோஷிய அணி, அதில் தோற்றுப்போனது. கடந்த 44 ஆண்டுகளில், முதல் முறையாக இந்த வேதனையான சாதனையை செய்துள்ளது க்ரோஷியா.


4 - பிரான்ஸ் அணி சுமார் 48 ஆண்டுகள் கழித்து, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 4 கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்பு, பிரேசில் அணி 1970-இல் இறுதிப்போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

1 - இந்த உலகக்கோப்பை தொடரில், பிரான்ஸ் - டென்மார்க் ஆடிய ஒரு போட்டியில் மட்டுமே இரண்டு அணிகளும் கோல் அடிக்காமல் ஆட்டம் சமன் ஆனது. 1954-க்கு பின், மிகக் குறைந்த அளவில் கோல் இல்லாத போட்டிகள் நடைபெற்றது இந்த 2018 தொடரில் மட்டுமே.

21 - இதுவரை நடைபெற்றுள்ள 21 உலகக்கோப்பை தொடர்களில், தொடரை நடத்தும் நாடு, தன் முதல் போட்டியில் இது வரை தோல்வியடைந்தது இல்லை. இந்த தொடரிலும் சவுதி அரேபியாவுக்கு எதிரான முதல் போட்டியில், தொடரை நடத்தும் ரஷ்யா வெற்றி பெற்றது.

1 - முதன்முறையாக இங்கிலாந்து அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் வெற்றி பெற்றுள்ளது.

4 - பிரேசில் அணி கடந்த நான்கு உலகக்கோப்பை தொடர்களில், ஐரோப்பிய அணிகளால் வெளியேற்றபட்டுள்ளது. (பிரான்ஸ் 2006, நெதர்லாந்து - 2010, ஜெர்மனி - 2014, பெல்ஜியம் - 2018)

3 - கடந்த மூன்று உலகக்கோப்பை தொடர்களிலும், முந்தைய தொடரின் சாம்பியன் அணி குரூப் சுற்றோடு வெளியேறின. இந்த முறை ஜெர்மனி, 2014இல் ஸ்பெயின், அதற்கும் முன்பு இத்தாலி சாம்பியனாக இருந்து குரூப் சுற்றோடு வெளியேறின.

5 - ரபேல் மார்க்கேஸ் ஐந்து உலகக்கோப்பை தொடரில் விளையாடிய மூன்றாவது நபராவார்.

3 - ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும், உலகக்கோப்பை வென்ற மூன்றாவது நபர் பிரான்சின் தற்போதைய பயிற்சியாளர், டிடியர் டெஸ்சாம்ப்ஸ்.

0 - மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ, இருவரும் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் இது வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மெஸ்ஸி 6 நாக் அவுட்களிலும், ரொனால்டோ எட்டு நாக் அவுட்களிலும் பங்கேற்று உள்ளனர்





Story first published: Tuesday, July 17, 2018, 18:46 [IST]
Other articles published on Jul 17, 2018
English summary
FIFA Worldcup 2018 Interesting facts and stats are out now. Have a look at the interesting list of numbers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X