கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்பு.. கால்பந்து உலகமே சோகம்.. இணையத்தில் உருக்கமான பதிவு!

மான்செஸ்டர்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Cristiano Ronaldo மகன் உயிரிழப்பு.. இணையத்தில் உருக்கமான பதிவு! | OneIndia tamil

கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கி வருபவர் மான்செஸ்டர் யுனைடெட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

தற்போது நடைபெற்று வரும் ப்ரீமியர் லீக் தொடரில் கோல் மழை பொழிந்து பெருமை பெற்றிருந்தார்.

5-வது குழந்தை

5-வது குழந்தை

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தான் ரொனால்டோ குடும்பத்தில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. கிறிஸ்டியானா ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிகுஸ் ஜோடிக்கு ஏற்கனவே கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும் ஈவா மற்றும் அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர். சமீபத்தில் மீண்டும் ஜார்ஜினா கர்ப்பமானார்.

இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள்

இந்த முறை இரட்டைக் குழந்தை பிறக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியடைந்தார். இந்நிலையில் நேற்று ஜார்ஜியானாவுக்கு குழந்தைகள் பிறந்தது. ஆனால் இரட்டை குழந்தையில் ஆண் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரொனால்டோவின் பதிவு

ரொனால்டோவின் பதிவு

இதுகுறித்து பதிவிட்டுள்ள ரொனால்டோ, இரட்டை குழந்தை பிறந்தது, அதில் ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டது, பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலியை தற்போது உணர்ந்துள்ளேன். பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தில் ஓரளவு நம்பிக்கையுடன் வாழ வலிமை அளிக்கிறது.

தனிமையை விரும்புகிறோம்

தனிமையை விரும்புகிறோம்

தனது மனைவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி என கூறியுள்ளார். இந்த இழப்பினால் பெரும் கஷ்டத்தில் இருக்கிறோம். எனவே இந்த கடினமாக நேரத்தில் தனிமையை விரும்புவதாக ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Football star Cristiano Ronaldo's newborn baby boy dies
Story first published: Tuesday, April 19, 2022, 9:45 [IST]
Other articles published on Apr 19, 2022
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X