For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

விளையாடிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ந்த அந்த விபரீதம்..! பிரபல முன்னாள் கேப்டன் மகன் திடீர் மரணம்

Recommended Video

Watch Video : former football legend cafu son died in heart attack

ரியோடி ஜெனிரோ: பிரேசில் முன்னாள் கேப்டன் கபுவின் மகன் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜாம்பவான் அணி என்று வர்ணிக்கப் படுவது பிரேசில். மொத்தம் 5 முறை உலக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

பிரேசில் அணியின் முன்னாள் கேப்டன் கபு. அவர் தலைமையிலான அணி, 2002ல் உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இது தான் பிரேசில் வென்ற உலக கோப்பை. அதன் பிறகு உலக சாம்பியன் பட்டத்தை வெல்ல வில்லை.

உலக கோப்பை சாம்பியன்

உலக கோப்பை சாம்பியன்

1994, 1998, 2002 ஆகிய ஆண்டுகளில் பிரேசில் அணிக்காக விளையாடியவர் கபு. சிறந்த தடுப்பாட்ட களவீரர். 2002ம் ஆண்டு இவர் தலைமையில் பிரேசில் உலக கோப்பை சாம்பியன் ஆனது, அதன் பிறகு இதுவரை சாம்பியன் ஆகவில்லை. எனவே, அந்நாட்டு ரசிகர்களிடையே கபுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

மகன் மரணம்

மகன் மரணம்

இந் நிலையில், கபுவின் மகன், டானிலோ பெலிசியானோ டி மொராய்ஸ், மாரடைப்பால் திடீரென உயிரிழந்து இருக்கிறார். கால்பந்து உலகில் இந்த மரணம், பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த மொராய்ஸ்சுக்கு வயது 30 தான்.

மாரடைப்பு

மாரடைப்பு

சாவ் பாலோவில் உள்ள தமது வீட்டில் அவர் கால்பந்து விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது லேசாக நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட அங்கிருப்பவர்கள் மொராய்சை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

பெருத்த சோகம்

பெருத்த சோகம்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். பிரபல கால்பந்து வீரரான கபுவின் மகன், கால்பந்து விளையாடும் போதே உயிரிழந்துள்ளது, கால்பந்து உலகில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்ர தூதர்

விளம்ர தூதர்

ரியல் மாட்ரிட், இன்டர் மிலன் மற்றும் ரோமா ஆகிய கால்பந்து அணிகள், கபுவின் மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றன. 1994 மற்றும் 2002 உலக கோப்பைகளை பிரேசில் வென்ற போது அணியின் முக்கிய தூணாக இருந்தவர் கபு. தற்போது 2022ம் ஆண்டு உலக கோப்பைக்கான விளம்பர தூதராக இருக்கிறார்.

Story first published: Monday, September 9, 2019, 13:13 [IST]
Other articles published on Sep 9, 2019
English summary
Former football legend cafu son died in heart attack in brazil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X