For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

முன்னாள் சாம்பியன்ஸ்-னு வெத்துப் பெருமை பேசுனா போதுமா? ஒரு வெற்றி கூட கிடைக்கலையே

டெல்லி : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், நான்கு சீசன்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான்கு சீசன்களில் எந்த ஒரு கிளப்பும் சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

ஐஎஸ்எல் போட்டிகளின் முதல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2015 ஆம் ஆண்டிலும் அந்த பட்டத்தை வெற்றிகரமாக தக்க வைக்க முயற்சி செய்தது. ஆனால் இறுதியில் கொல்கத்தா அணியை சென்னை அணியினர் தோற்கடித்தனர்.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இதுவரை நடைபெற்ற 4 சீசன்களில் இரண்டில் கொல்கத்தா அணியும், இரண்டில் சென்னை அணியும் கோப்பையை கைப்பற்றி உள்ளன. எனினும், இப்போது 5 ஆவது சீசனில் இந்த இரு அணிகளுமே தங்கள் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை.

சாம்பியன்களின் தோல்விகள்

சாம்பியன்களின் தோல்விகள்

சென்னையின் எஃப்சி அணி பெங்களூரு எஃப்சி மற்றும் எஃப்சி கோவாவிற்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதே போல் ஏடிகே அணியும் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. தலை சிறந்த பயிற்சியாளரான ஸ்டீவ் கோப்பல்-ஐ கொண்டிருக்கும் ஏடிகே அணி, கேரள பிளாஸ்டர்ஸ் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணிகளால் தங்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்தப்பட்டது.

கோப்பல் என்ன சொல்கிறார்?

கோப்பல் என்ன சொல்கிறார்?

இது தொடர்பாக கோப்பல் கூறுகையில், "பரவாயில்லை, சிறிது நாள் ஓய்வுக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்குகிறது. இந்த போட்டியை 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் போல நினைக்க வேண்டும். கடுமையாக உழைத்து, அடுத்து வரும் போட்டியில் டெல்லி டைனமோஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏடிகேவில் சிறந்த வீரர்கள்

ஏடிகேவில் சிறந்த வீரர்கள்

மானுவேல் (கோவா) காலு உச்சே (டெல்லி) ஜான் ஜான்சன்(பெங்களூரு) எவர்டன் சாண்டோஸ் (மும்பை) போன்ற அணிகளில் இருந்த பல நட்சத்திர வீரர்களை கோப்பல் ஒருங்கிணைத்துள்ளார். இப்படி சிறந்த வீரர்கள் இருந்தும் ஏடிகே அணிக்கு வெற்றி சாத்தியப்படவில்லை. ஏடிகே அணி வரும் அக்டோபர் 17 அன்று டெல்லி டைனமோஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னையின் சறுக்கல்கள்

சென்னையின் சறுக்கல்கள்

சென்னையின் எஃப்சி அணியைப் பொறுத்தவரை மிட் ஃபீல்டர்கள் சரியாக செயல்படுவதில்லை என பயிற்சியாளர் ஜான் கிரிகோரி தெரிவித்துள்ளார். சென்னை அணியின் தனபால் கணேஷ் காயமடைந்துள்ளதும் அணிக்கு பின்னடைவைத் தந்துள்ளது. சென்னை அணி ஜேர்மன் பிரீத் சிங் மற்றும் ஐசக் வான்மலாஸ்மா ஆகியோருடன் பெங்களூருக்கு எதிராக விளையாடியதிலும், கோவா அணிக்கு எதிராக விளையாடியதிலும் தோல்வியைத் தழுவியது.

அழுத்தத்தில் ஜான் கிரிகோரி

அழுத்தத்தில் ஜான் கிரிகோரி

ஜான் கிரிகோரி கூறுகையில் "சென்னை அணியின் தலைவராக இருக்கிறேன் அதனால் வெற்றி பெற வேண்டிய அழுத்தம் என்னை சேர்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே சென்னை அணியை பலமானதாக உருவாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. ஏடிகே அணியுடன் விளையாடவுள்ள ஆட்டத்தில் இதை நிரூபிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறேன்" என்றார் ஜான் கிரிகோரி. சென்னை அணி வரும் அக்டோபர் 18 அன்று நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியை சந்திக்க உள்ளது.

Story first published: Monday, October 15, 2018, 17:33 [IST]
Other articles published on Oct 15, 2018
English summary
Former ISL champions ATK and Chennayin FC, are struggling to get their first victory in fifth season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X