For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

"கோல் மழை" சாம்பியன்ஸ் அணிக்கு சாபமா.. ஆஸி.யை புரட்டி எடுத்த பிரான்ஸ் வீரர்கள்!

தோஹா: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.

ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடரில் குரூப் டி-யில் உள்ள நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது. ஏற்கனவே அர்ஜென்டினா அணி தோல்வியடைந்ததால், பிரான்ஸ் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் டிஃபெண்டிங் சாம்பியன்களுக்கான சாபம் பிரான்ஸ் அணியை பாதிக்குமா என்ற கேள்வியும் போட்டிக்கு மற்றொரு எதிர்பார்ப்பாக இருந்தது.

லோகோ, பாடல், வித்தியாசமான கால்பந்து.. 2018 பிஃபா உலகக் கோப்பை போட்டியின் சிறப்புகள்! லோகோ, பாடல், வித்தியாசமான கால்பந்து.. 2018 பிஃபா உலகக் கோப்பை போட்டியின் சிறப்புகள்!

 முதல் கோல் அடித்த ஆஸி.

முதல் கோல் அடித்த ஆஸி.

இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே பிரான்ஸ் அணி டிஃபென்ஸ்-ல் செய்த தவறை பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணியின் குட்வின் முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஒரே நாளில் ஒன்னொரு அப்செட்டுக்கு தயாராக வேண்டுமோ என்று ரசிகர்க்ள் எண்ணத் தொடங்கினர். ஆனால் இதற்கு பதிலடியாக பிரான்ஸ் அணியின் ரேபியோ 27வது நிமிடத்தில் ஹெட்டர் மூலம் கோல் அடித்து 1-1 என்று கோல் கணக்கில் சமநிலை ஏற்படுத்தினார்.

 பதிலடி கொடுத்த பிரான்ஸ்

பதிலடி கொடுத்த பிரான்ஸ்

இதனைத் தொடர்ந்து அடுத்த 5 நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஜிருட் ஒரு கோல் அடிக்க, பிரான்ஸ் அணி 2-1 என்ற முன்னிலைப் பெற்றது. பின்னர் பிரான்ஸ் அணி மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் மேலும் எந்த கோல்களும் அடிக்கப்படவில்லை. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி முன்னிலையில் இருந்தது.

எம்பாப்பேவின் அதிரடி

எம்பாப்பேவின் அதிரடி

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது போல் ஒன் டச் பாஸ் முறையில் பிரான்ஸ் அணி வீரர்கள் விளையாட தொடங்கினர். இதனால் பெரும்பாலும் பந்து பிரான்ஸ் அணி வீரர்களின் கால்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதன் பலனாக 68வது நிமிடத்தில் டெம்பில்லே கொடுத்த அற்புதமான கிராஸை, நட்சத்திர வீரர் எம்பாப்பே ஹெட்டர் மூலம் கோல் அடித்தார். இதன்மூலம் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

பிரான்ஸ் வெற்றி

பிரான்ஸ் வெற்றி

இந்த கோல் அடிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் எம்பாப்பே வேகமான அசிஸ்ட் காரணமாக மீண்டும் ஜிரூட் பிரான்ஸ் அணிக்காக அடுத்த கோலை அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் கோல் கீப்பரின் திறமையால் மேலும் கோல்கள் விழவில்லை. இதன்பின்னனர் இரண்டாம் பாதி இறுதியில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஏற்கனவே துனிஷியா - டென்மார்க் அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிவடைந்ததால், குரூப் டி பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது.

Story first published: Wednesday, November 23, 2022, 2:45 [IST]
Other articles published on Nov 23, 2022
English summary
In the match against the Australian team, the current champion France team won with the score of 4-1.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X