For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

மெஸ்ஸிக்கு தங்கப் பந்தா... ஃபிஃபா தலைவருக்கே பயங்கர ஆச்சரியமாப் போச்சாமே!

ரியோ டி ஜெனீரோ: அர்ஜென்டைனாவின் லியோனல் மெஸ்ஸிக்கு தங்கப் பந்து வழங்கப்பட்டது தனக்கு ஆச்சரியம் அளித்துள்ளதாக சர்வதேச கால்பந்துக் கழகத் தலைவர் செப் பிளேட்டர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மெஸ்ஸிக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது குறித்து அதிருப்தி வெளியிட்டோர் பட்டியலில் பிளேட்டரும் இணைந்துள்ளார்.

ஏற்கனவே மெஸ்ஸியின் குருவும், அர்ஜென்டைனாவின் முன்னாள் ஜாம்பவானுமான மாரடோனாவும் கூட பகிரங்கமாக இதற்கு வெறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸிக்கு தங்கப் பந்து

மெஸ்ஸிக்கு தங்கப் பந்து

உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரின் முடிவில் பல்வேறு விருதுகளும், பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இதில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அர்ஜென்டைனாவின் மெஸ்ஸிக்கு தங்கப் பந்து விருது வழங்கப்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவர் சிறந்த வீரரா...

அவர் சிறந்த வீரரா...

சிறந்த வீரருக்குத் தரப்படும் விருது இது. ஆனால் மெஸ்ஸியை விட சிறந்த வீரர்கள் பலர் இருக்கும்போது அவருக்கு கொடுத்தது எப்படி சரியாகும் என்பது எதிர்ப்பாளர்களின் கேள்வியாகும்.

மார்க்கெட்டிங் ஐடியா

மார்க்கெட்டிங் ஐடியா

இதுகுறித்து மாரடோனா கருத்து தெரிவிக்கையில் இந்த விருது மெஸ்ஸிக்கே சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. இது தவறான முடிவு. எல்லாம் மார்க்கெட்டிங் திட்டம்தான் என்று சாடியிருந்தார்.

பிளேட்டரும் அதிருப்தி

பிளேட்டரும் அதிருப்தி

இந்த நிலையில் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கழக தலைவர் பிளேட்டரிடம் கேட்கப்பட்டபோது, இந்தக் கேள்விக்கு நான் சாதுரியமாக பதில் தரவா அல்லது உண்மையைச் சொல்லவா என்று திருப்பிக் கேட்டார்.

எனக்கே ஆச்சரியம்தான்

எனக்கே ஆச்சரியம்தான்

தொடர்ந்து அவர் கூறுகையில், எனக்கே கூட இது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் மெஸ்ஸி பல்வேறு போட்டிகளில் கோல் போட்ட விதத்தைப் பாருங்கள். அவை அனைத்துமே சிறந்தவை, ஆணித்தரமானவை என்றார் பிளேட்டர்.

முல்லருக்கு அதிக ஆதரவு

முல்லருக்கு அதிக ஆதரவு

ஆனால் மெஸ்ஸிக்குப் பதில் ஜெர்மனியின் தாமஸ் முல்லர் அல்லது நெதர்லாந்தின் அர்ஜன் ராபன் ஆகியோருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த வாட்டி சிறந்த அழுகைக்கு பரிசு தாங்கப்பா!

அடுத்த வாட்டி சிறந்த அழுகைக்கு பரிசு தாங்கப்பா!

பேசாமல் அடுத்த முறை சிறந்த அழுகைக்கு தங்க கர்ச்சீப் விருதை ஏற்படுத்தித் தரலாம். காரணம், இந்த தொடரில் பல வீரர்கள் கதறிக் கதறி அழுததைப் பார்க்க முடிந்தது. ஆனால் பிரேசில் வீரர்கள்தான் செமையாக அழுது தீர்த்தனர்.. தங்க கர்ச்சீப் விருதை ஏற்படுத்தினால் பிரேசிலுக்குத்தான் உறுதியாக அந்த விருது கிடைக்கும்.. அழுது..ஸாரி.. அடித்துச் சொல்லலாம்!

Story first published: Tuesday, July 15, 2014, 18:17 [IST]
Other articles published on Jul 15, 2014
English summary
The Golden Ball controversy has escalated with FIFA president Sepp Blatter himself expressing "surprise" over Lionel Messi getting the award. World Cup Special Many were surprised and shocked at Messi being chosen for the Golden Ball at the end of FIFA World Cup 2014 final on Sunday (July 13).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X