For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

பாகுபலியும், பல்வாள் தேவனும் ஒரே அரியணையில்.. "தோஸ்து" மோடு ஒர்க் அவுட் ஆகுமா?

ஸ்பெயின்: கால்பந்து உலகில் இன்றைய தேதிக்கு பரபரப்பான செய்தி என்றால், அது பார்சிலோனா அணியை விட்டு மெஸ்ஸி விலகி, பிஎஸ்ஜி அணியில் இணைந்திருப்பது தான்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸியின் மற்றொரு அடையாளம் என்னவென்று ரசிகர்களிடம் கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் பெயர் பார்சிலோனா.

முதல் டெஸ்டில் வந்த விணை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் புள்ளிகள் குறைப்பு.. ஐசிசி அதிரடி! முதல் டெஸ்டில் வந்த விணை.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் புள்ளிகள் குறைப்பு.. ஐசிசி அதிரடி!

ஆனால், இப்போது அவர் அந்த அணியில் இருந்து விலகியிருப்பது பார்சிலோனா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி எனலாம். இன்னமும் கூட அவர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

தோனி, சச்சின், மெஸ்ஸி

தோனி, சச்சின், மெஸ்ஸி

தனது இளம் வயதில், அதாவது தனது 17-வது வயதில் இருந்து ஸ்பெயின் லீக் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக லா லிகா, சாம்பியன்ஸ் லீக், கிளப் உலக கோப்பை உள்பட 35 பட்டங்களை குவித்ததில் முக்கிய பங்காற்றி இருக்கிறார். தோனிக்கு எப்படி சென்னை சூப்பர் கிங்ஸோ, பார்சிலோனாவுக்கு மெஸ்ஸி. தனது கால்பந்து விளையாட்டின் கடைசி காலம் வரை பார்சிலோனா அணியில் தான் மெஸ்ஸி என்று எதிர்பார்க்கப்பட்டது.

முயற்சிகள் தோல்வி

முயற்சிகள் தோல்வி

ஆனால், விதி நிதி நெருக்கடி மூலம் வந்தது. தற்போது பார்சிலோனா நிதி பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. வீரர்களின் ஊதிய உச்சவரம்பில் புதிய மாற்றங்களை அந்த அணி கொண்டு வந்தது. இதில் மெஸ்ஸிக்கு உடன்பாடு இல்லை. எனினும், மெஸ்ஸி தரப்பிலும் பார்சிலோனா தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், எல்லா முயற்சியும் தோல்வியில் முடிய, 21 ஆண்டுகால மெஸ்ஸி - பார்சி பயணம் முடிவுக்கு வந்தது.

கண்ணீர்விட்ட மெஸ்ஸி

கண்ணீர்விட்ட மெஸ்ஸி

இதன் பிறகு மெஸ்ஸியை வழியனுப்பும் நிகழ்வை பார்சிலோனா அணி நடத்திய போது மனுஷன் தேம்பி தேம்பி அழுதுவிடடார். அப்போது அவர், "பார்சிலோனா கிளப்பில் இணைந்த முதல் நாளில் இருந்து கடைசி வரை அந்த அணிக்காக என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறேன். 'பார்சிலோனாவுக்கு குட்பை' சொல்வேன் என கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. உண்மையிலேயே பார்சிலோனாவை விட்டு பிரிவதற்கு கடினமாக உள்ளது" என்று கலங்கினார்.

ரூ.305 கோடி

ரூ.305 கோடி

ரசிகர்களும் பீலிங்ஸில் இருக்க, அடுத்த இரண்டே நாளில் புதிய கிளப்பில் இணைந்துள்ளார் மெஸ்ஸி. ஃபிரான்சில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) கால்பந்து அணிக்காக விளையாட 2 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த புதிய ஒப்பந்தப்படி மெஸ்சிக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.305 கோடி ஊதியமாக கிடைக்கும். இதில், ஹைலைட் என்னவெனில், இதே கிளப்பில் தான் பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மார், பிரான்சின் நட்சத்திர பிளேயர்ஆகியோர் கைலியன் எம்பாப்பே விளையாடி வருகிறார்கள். இந்த மூவர் கூட்டணி இப்போது பி.எஸ்.ஜி. கூட்டணியில் கைக்கோர்த்துள்ளது. இவர்களது டார்கெட் நிச்சயம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பை என்பதில் துளியும் சந்தேகமில்லை.

ரெக்கார்டு பிரேக்கிங் விலை

ரெக்கார்டு பிரேக்கிங் விலை

இந்த பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன் கால்பந்து கிளப் அணி ஆகஸ்ட் 1970 இல் பாரிஸ் கால்பந்து கிளப் மற்றும் ஸ்டேட் செயிண்ட்-ஜெர்மைன் இணைப்புக்கு பிறகு நிறுவப்பட்டது. கிளப் தொடங்கப்பட்ட உடனேயே அதகளம் புரியத் தொடங்கியது PSG அணி. முதல் சீசனில் டிவிஷன் 2 பட்டத்தை வென்றது. ஆனால், இரண்டே ஆண்டுகளில்.. அதாவது 1972ல் கிளப் இரண்டாக உடைந்தது. இந்த பிரிவில் இருந்து மீண்டு வர அந்த அணி படாதபாடு பட வேண்டியதாயிருந்தது. 2011ல் Qatar Sports Investments PSG அணியை வாங்கிய பிறகு அந்த அணி நுனி முதல் வேர் வரை மாற்றப்பட்ட்டது. புதுப்பிக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த வீரர்களை அணியில் களமிறக்கியது. ஸ்லாடன் இப்ராஹிமோவிச், தியாகோ சில்வா, எடிசன் கவானி, ஏங்கல் டி மரியா போன்ற வீரர்கள் அணியின் இணைந்தனர். குறிப்பாக, நெய்மர் மற்றும் கைலியன் எம்பாபே போன்ற கால்பந்து வீரர்களை ரெக்கார்டு பிரேக்கிங் விலைக்கு வாங்கி அதிர்வலைகளை ஏற்படுத்தியது PSG அணி.

நம்பர்.1 எனிமி

நம்பர்.1 எனிமி

சுவராஸ்யம் இனிமேல் தான் ஆரம்பிக்கவிருக்கிறது. கால்பந்து உலகில் மெஸ்ஸியின் போட்டியாளர் யார் என்றால் ஜெனரல் ஆடியன்ஸ் சொல்வார்கள் ரொனால்டோ என்று. ஆனால், அந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. மெஸ்ஸியின் நம்பர்.1 'எனிமி' என்றால் அது ஸ்பெயின் 'தி கிரேட்' செர்ஜியோ ரமோஸ் (Sergio Ramos) தான். இருவருக்குள்ளும் எப்போதும் மோதல் இருக்கும். அது சர்வதேச போட்டிகளில் விளையாடினாலும் சரி, கிளப் போட்டிகளில் ஆடினாலும் சரி.

இணைந்த கைகள்

இணைந்த கைகள்

மெஸ்ஸியை வம்பிழுப்பது தான் செர்ஜியோ ரமோஸின் தலையாய பணி. வம்பிழுப்பது என்றால் சும்மா வார்த்தைப் போர் என்று நினைத்து விடாதீர்கள். எல்லாமே ஃபிஸிக்கல் அட்டாக் தான். மெஸ்ஸி அவ்வப்போது தரையில் உருண்டு புரள்வது எல்லாம் ரமோஸ் காரணமாகத் தான். டிஃபன்ட் பண்ணுகிறேன் என்று மெஸ்ஸி கால்களை தட்டிவிடுவது, வாரி விடுவது, தள்ளிவிடுவது என்று மோதல் அனல்பறக்கும். அப்படிப்பட்ட ரமோஸ் மற்றும் மெஸ்ஸி இருவரும் இப்போது ஒரே அணியில் இருப்பது தான் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதவாது, சச்சினும், அக்தரும் ஒரே அணியில் இணைந்து விளையாடினால் எப்படி இருக்கும்? அதைவிட ஒரு 10 மடங்கும் மிளகாய் பொடியை எக்ஸ்டரா தூவிக் கொள்ளுங்கள்.. அப்படி இருக்கும்!.

இனி யார் காலை வாரி விடுவாரு ரமோஸ்!?

Story first published: Wednesday, August 11, 2021, 20:33 [IST]
Other articles published on Aug 11, 2021
English summary
History of Paris Saint-Germain F.C Messi and ramos - மெஸ்ஸி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X