For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கால்பந்து வீரர் சுனில் சேத்திரிக்கு கொரோனா..ஐ.எஸ்.எல்-ல கூட இருந்தாரே..இன்னும் எத்தன பேருக்கு தெரியல

பெங்களூரு: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் பாதுகாப்பு நடைமுறைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்திரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐஎஸ்.எல்.கால்பந்து

ஐஎஸ்.எல்.கால்பந்து

நடந்து வரும் இந்திய ப்ரீமியர் கால்பந்து தொடரில் பெங்களூரு எஃப்சி அணிக்காக சுனில் சேத்திரி விளையாடினார். இதில் மொத்தம் 20 போட்டிகளில் ஆடிய சுனில் சேத்திரி 8 கோல்களை அடித்தார். எனினும் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 7வது இடத்தை பிடித்து வெளியேறியது. அந்த அணி தொடரில் வெறும் 22 புள்ளிகளை மட்டுமே பெற்றது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த தகவலை சொல்வதில் எனக்கு வருத்தமாக உள்ளது. எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் கொஞ்சம் ஆறுதலான தகவல் என்னவென்றால், தற்போது நான் இந்த வைரஸில் இருந்து மீண்டு வருகிறேன். விரைவில் கால்பந்து விளையாட திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த போட்டி

அடுத்த போட்டி

இந்திய கால்பந்து அணி அடுத்ததாக ஓமன் மற்றும் ஐக்கிர அரபு அமீரகம் அணிகளுடன் மோதவுள்ளது. இந்த போட்டிகள் துபாயில் வரும் மார்ச் 25 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி உறுப்பினர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் சுனில் சேத்திரியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. சேத்திரி கடைசியாக 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீரர்

சிறந்த வீரர்

சர்வதேச கால்பந்து போட்டிகளில் தற்போது அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 72 கோல்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். மூன்றாம் இடத்தில் 71 கோல்களுடன் அர்ஜெண்டினாவின் மெஸ்சியும், முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோ 102 கோல்களை அடித்துள்ளார். முதல் இடத்திற்கு முன்னேற சுனில் சேத்திரி மற்றும் மெஸ்சியும் போட்டி போட்டு வருகின்றனர்.

Story first published: Thursday, March 11, 2021, 18:57 [IST]
Other articles published on Mar 11, 2021
English summary
Indian football team captain Sunil Chhetri Tested Positive for COVID19
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X