For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

விறுவிறுப்பான கட்டத்தில் ஐஎஸ்எல் கால்பந்து… மும்பை, பெங்களூரு அணிகள் நாளை மோதல்

மும்பை:ஐஎஸ்எல் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் டாப் 2 இடங்களில் உள்ள மும்பை சிட்டி எஃப்சி அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் நாளை மும்பை அரினா அரங்கத்தில் மோதுகின்றன.

புள்ளி அட்டவணையில் 10வது இடத்தில் இருந்த மும்பை அணி கடைசி போட்டியில் 3புள்ளிகளை எடுத்து அட்டவணையில் முன்னேறியுள்ளது. ஒரு இடைவேளைக்கு பிறகு தங்கள் அணி மீண்டும் புத்துணர்வுடன் களம் இறங்க உள்ளது.

அணியில் இடம்பிடித்தார்

அணியில் இடம்பிடித்தார்

ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்ட ஸ்நேஜ் சிங் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். ஆனால் மற்றொரு வீரரான நிஜுகுமார் இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் அவர் இடம் பெறவில்லை.

முக்கிய முடிவுகள்

முக்கிய முடிவுகள்

இது குறித்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜார்ஜ் கோஸ்டா கூறியதாவது: இந்த இடைவெளி தங்கள் அணிக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேரத்தில் தங்கள் அணியின் முன்னேற்றம் குறித்து சில முவுகளை எடுத்துள்ளோம்.இந்த இடைவேளை வீரர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

வீரர்கள் ஓய்வு

வீரர்கள் ஓய்வு

மேலும் வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஓய்வெடுத்தனர். ரெய்னியர் ஃபெர்னாண்டஸ் மற்றும் மிலன் சிங் ஆகியோர் மிட்ஃபீல்ட் பகுதியில் களம் இறங்குவார்கள் என்றும் பாலோ மச்சோவும் இவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். கேரள பிளாஸ்டர்களுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் காயமடைந்த ஜெயன் லாரென்கோவின் தற்போது குணமடைந்துள்ளார் என்று ஜோர்டே கோஸ்டா கூறினார்.

தொடர் போட்டி

தொடர் போட்டி

இதனிடையே பெங்களூரு எஃப்சி அணி இது வரை யாரும் வெல்ல முடியாத இடத்தில் உள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இதகுறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கார்லஸ் குவாட்ரெட், கூறியதாவது:

பயிற்சியார் கணிப்பு

பயிற்சியார் கணிப்பு

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் நட்சத்திர வீரர் மிக்கு மீண்டும் முழு பலத்துடன் களம் இறங்குகிறார். ஆனால் மற்றொரு வீரரான நிஜுகுமார் இன்னும் காயத்தில் இருந்து மீளாததால் அவர் இடம் பெறவில்லை. எனவே போட்டி கடினமாகவும்,விறுவிறுப்பாகவும் இருக்கும் என்றும் கூறினார்.

Story first published: Saturday, January 26, 2019, 13:38 [IST]
Other articles published on Jan 26, 2019
English summary
India super league, mumbai will meet bengaluru tomorow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X