For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எஃப்சி கோவா அணியுடன் சிக்கோ செய்யாததை செர்ஜியோ லோபெராவால் செய்ய முடியுமா?

மும்பை : எஃப்சி கோவா அணியின் தலைமைப் பயிற்சியாளராக செர்ஜியோ லோபெரா ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்ற செய்தி எதிரி அணிகளை விரக்தியடையச் செய்துள்ளன. அதே நேரத்தில் நடுநிலையாளர்கள் இதை கொண்டாடி மகிழ்கிறார்கள்.

ஒரு சீசனுக்கு மேலாக, ஹீரோ இந்திய சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளில் செர்ஜியோ லோபெராவின் எஃப்சி கோவா அணி ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தி வருகிறது. மேலும் தொடக்கத்தில் இருந்தே அந்த அணி வெற்றியைப் பெற்று வருவதால் ரசிகர்கள் இந்த அணி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். கோவா அணியின் முன்னாள் பயிற்சியாளர் பிரேசிலின் சிக்கோ, தடுப்பாட்ட முறையை வீரர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஆனால் தற்போது செர்ஜியொ லோபெரா வேறு அணுகுமுறையை பயன்படுத்தினாலும் அதை முற்றிலும் நிறுத்திவிடவில்லை.

ISL 2018 - Can Lobera do what Zico couldn’t with FC Goa?

இது குறித்து கருத்துத் தெரிவித்த லோபெரா, இந்த அணியில் இருப்பது எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகிறது என்றும் இங்குள்ள வசதிகள், சுற்றுச்சூழல் போன்றவை எங்களை வளர்த்துக் கொள்ள மிகவும் உதவுகிறது என்றும் தெரிவித்தார். திறமைகளை வளர்த்துக் கொள்வதோடு சவால்களை சந்திப்பதில் இந்த அணி மிகுந்த அக்கறை கொண்டுள்ளது எனவும் லோபேரா தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு பிரேசிலின் சிக்கோ தலைமையிலாக அணி சென்னையுடன் இறுதிப் போட்டியில் மோதியது. ஆனால் 2 - 3 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. அதே நேரத்தில் லோபெரா அதைவிட சிறப்பாக செய்வார் என எதிர்பார்க்கலாம். தற்போது கோவா அணி வெற்றி பெறுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.

கோவா அணியின் ஃபெரான் கொராமினாஸ் அற்புதமாக விளையாடி 8 கோல்கள் அடித்துள்ளார். மேலும் 4 கோல்கள் அடிக்க உதவி புரிந்துள்ளார்.. மேனுவல் லான்சட்ரேட் இல்லாதபோதும் அணியை அவர் சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.

எந்த இடத்தில் இருந்து எப்படி அடித்தால் கோல் அடிக்கலாம் என்பதை கொராமினாஸ் தெரிந்து வைத்துள்ளார். உதாரணமாக புனே அணியுடன் விளையாடியபோது ஹ்யூகோ பௌமோஸ் மற்றும் ஜாக்கிசந்த் சிங் ஆகியோருடன் இணைந்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் எடு பேடியா மற்றும் ஜாக்கிசந்த் ஆகியோர் ஒருவருக்கொருவர் நன்றாக விளையாடினர். ஒட்டு மொத்தமாக லோபெரா தலைமையில் உள்ள கோவா அணிவேறு லெவலில் உள்ளது எனலாம்.

இருந்த போதிலும் கோவா அணி தற்போது அட்டவணையில் இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியைவிட மூன்று புள்ளிகள் மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளில் வீரர்கள் தங்கள் விளையாட்டை இன்னும் வேகப்படுத்த வேண்டும்.

கோவா அணியில் ஆர்வமுள்ள ஒரு குறிப்பிட்ட வீரர் ஜஹுஹ். இதே போல் மொராக்கோ ஒரு புதிய கண்டுபிடிப்பாக விளங்குகிறார். லென்னி மற்றும் ஜஹுஹ் ஆகியோர் புதிய அறிமுகங்களில் முதலிடம் வகிக்கிறார்கள்.

நாங்கள் கடந்த சில சீசன்களில் வெற்றி பெற முடியாத நிலையில் இருந்தோம், அதே நேரத்தில் கடந்த சீசனில் இருந்து எங்கள் தாக்குதலைப் பற்றிய புள்ளிவிவரங்களைக் தெளிவாக தெரிந்து கொண்டோம். ஆனாலும் இந்த சீசனில் நாங்கள் தடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற முடியும் என்றும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றும் பயிற்சியாளர் லோபெரா தெரிவித்துள்ளார்.

தற்போது எஃப்.சி கோவா அணி கால்பந்து போட்டிகளில் சிறந்த தாக்கும் திறன், தடுப்பாட்டம் போன்றவ்ற்றில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளது.

ரசிகர்களின் விருப்பத்தை கோவா அணியினர் பூர்த்தி செய்வார்களா? லோபெராவை ஓர் ஆண்டுக்கு ஒப்பந்த நீட்டிப்பு செய்தது பலன் தருமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்....

(Photos Courtesy - ISL)

Story first published: Tuesday, November 20, 2018, 19:27 [IST]
Other articles published on Nov 20, 2018
English summary
ISL 2018 - Can Lobera do what Zico couldn’t with FC Goa?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X