ஐஎஸ்எல் 2018 : கேரளாவை வீழ்த்தியாச்சு! கோவாவை வீழ்த்த முடியுமா? புனே அணிக்கு சவால்

ஐஎஸ்எல் 2018 : கேரளாவை வீழ்த்தியாச்சு! கோவாவை வீழ்த்த முடியுமா? புனே அணிக்கு சவால்

புனே : இன்று (டிசம்பர் 10) நடைபெற உள்ள ஐஎஸ்எல் போட்டியில் கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது புனே சிட்டி அணி.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் கடைசியாக நடந்த போட்டியில் புனே அணி சிறப்பாக விளையாடி ஒரு வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால் டிசம்பர் 10 அன்று புனே பாலிவாடி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது அந்த அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

முந்தைய போட்டியில் புனே அணி கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கு எதிராக மன உறுதியுடன் வெற்றி பெற்ற போதிலும், அந்த வீரர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என முடிவுடன் உள்ளனர். பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல அந்த அணி 11 ஆட்டங்களில் 8 புள்ளிகள் எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் நெருப்பு போன்ற ஓர் அணியுடன் மோத வேண்டியுள்ளது.

கோவா அணி கடந்த சீசனில் அதிக புள்ளிகளைக் கொண்ட அணியாக இருந்தது. தற்போதும் அந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த புனே அணியின் இடைக்கால பயிற்சியாளர் பிரதியூம் ரெட்டி. அதே நேரத்தில் கோவா அணியின் அச்சுறுத்தலை சமாளிக்கவும், அந்த அணியை அச்சுறுத்தவும் தடுப்பாட்டத்தை கையாள வேண்டும் என்கிறார்.

அவர் மிகுவல் ஏஞ்சலலிடம் இருந்து அணியை எடுத்துக் கொண்டபோது முதன் முதலாக கோவா எஃப்சி அணியை எதிர் கொண்டது. ஃபாடோர்டாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 2 - 4 என்ற கோல் கணக்கில் புனே அணி தோற்றது. அது வேதனை மிகுந்ததாக இருந்தாலும், தற்போது புனே அணி வெகுவாக வளர்ந்திருக்கிறது.

ஐஎஸ்எல் லீக் கடந்த போட்டியில் கேரள அணியை தோற்கடிக்க மிகவும் உதவியான இருந்த மார்சிலோனாவிடம் இருந்து பயிற்சியாளர் இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறார்.

கடந்த 2 போட்டிகளில் கோவா அணி வெற்றி பெறவில்லை என்பதால் அந்த அணியின் பயிற்சியாளர் செர்ஜியோ லோபிரா, அந்த அணியிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறார். மேலும் 2 - 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது கோவா அணிக்கு ஏமாற்றமாக இருந்தது.

புனே அணிக்கு எதிரான எந்த விளையாட்டும் அவ்வளவு இலகுவானது அல்ல. அவர்கள் கடந்த போட்டியில் ஜெயித்து அதிக நம்பிக்கையுடன் இருகிறார்கள். அதனால் நாங்கள் மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்கிறார் கோவா அணியின் துணைப் பயிற்சியாளர் ஜீசஸ் டாட்டோ.

எங்கள் அணி 9 போட்டிகளில் விளையாடி 17 புள்ளிகள் பெற்று புள்ளி அட்டவணையில் 4 இடத்தில் இருக்கிறோம் என்கிறார் ஜீசஸ்.

எங்கள் அணிக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால் ஹூகோ பௌமோஸ் மற்றும் மொஹமட் அலி, ஆகியோர் சண்பெண்டு செய்யப்பட்ட பின் இந்த போட்டியில் மீண்டும் களம் இறங்குகின்றனர். இந்த சீசனில் 8 கோல்களை அடித்த ஃபெரான் கொராமினாஸ் மீது அனைவரது கண்களும் உள்ளன.

கோவா அணிக்கு எதிராக தங்கள் அணிக்கு மீண்டும் ஒரு வெற்றியை பெற்றுத் தந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார் ரெட்டி.. அவருக்கு வெற்றி கிடைக்குமா ?

(Photos Courtesy - ISL)

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

மைகேலில் பேன்டசி கால்பந்து விளையாடுங்க.. தினசரி பரிசு வெல்லுங்க.. உங்க நண்பர்களையும் சவாலுக்கு கூப்பிடுங்க!

English summary
Read the match preview and analysis of FC Pune City vs Goa FC in ISL 2018. இன்று (டிசம்பர் 10) நடைபெற உள்ள ஐஎஸ்எல் போட்டியில் கோவா அணியை எதிர்த்து விளையாட உள்ளது புனே சிட்டி அணி. முந்தைய போட்டியில் புனே அணி கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கு எதிராக மன உறுதியுடன் வெற்றி பெற்றது. கோவா அணிக்கு எதிராக தங்கள் அணிக்கு மீண்டும் ஒரு வெற்றியை பெற்று விட வேண்டும் என்று முயற்சி செய்கிறது புனே அணி. வெற்றி கிடைக்குமா?
Story first published: Tuesday, December 11, 2018, 10:09 [IST]
Other articles published on Dec 11, 2018
+ மேலும்
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X