For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

எல்லா சீசன்லயும் நம்ம ஆட்டம் தான்.. கோல் மழை பொழிந்து கெத்து காட்டும் ஸ்பானிஷ் வீரர்

மும்பை : கோவா அணியின் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸின் விளையாட்டு இந்த சீசனில் எத்தகையது என்பதை கடந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியினர் நன்கு உணர்ந்துவிட்டனர்.

கோவா அணியின் ஸ்பானிஷ் நட்சத்திர வீரர் ஃபெரான் கொராமினாஸ், ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கடந்த சீசன் போட்டிகளில் 18 கோல்களை அடித்ததன் மூலம் கோல்டன் பூட்டைக் கைப்பற்றினார்.

ISL 2018 - Goa’s Ferran Corominas proved what he is capable of after Kerala Blasters match

ஸ்பானிஷ் வீரரான அவர், இந்த சீசனில் தனது ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினார். எந்த இடத்திலும் அவர் தனது கெளரவத்தை விட்டுக் கொடுத்து ஆடவில்லை. நார்த் ஈஸ்ட் அணியின் பார்தோலோம் ஓக்பேச் 6 ஆட்டங்களில் விளையாடி 6 கோல்கள் அடித்துள்ள நிலையில் ஃபெரான் கொராமினாஸ். 6 ஆட்டங்களில் விளையாடி 8 கோல்கள் அடித்து இந்த சீசனில் முதல் இடத்தில் உள்ளார்.

கேரளாவுக்கு எதிரான கடந்த போட்டியில் அந்த அணி வீரர்களின் தடுப்பாட்டத்தைச் சமாளித்து கொரா அற்புதமாக இரண்டு கோல்களை அடித்தார். அதில் முதல் கோல் சகவீரர்களின் முயற்சி மற்றும் கோல் கீப்பர் சற்று கவனிக்காமல் இருந்த நிலையில் அடித்தார். மற்றொன்று முற்றிலும் அவரது தனிப்பட்ட முயற்சியால் கோல் அடித்தார்.

[காலம் மாறும்.. எங்க ரேங்க் மட்டும் மாறாது.. நங்கூரம் போட்டு நின்ற பும்ரா, கோலி]

கொராவின் திறமை கேள்விக்குரியது அல்ல. அவர் ஒரு மிகச் சிறந்த வீரர். அவருக்கு மட்டும் நீங்கள் வாய்ப்பு கொடுத்தால் உங்களை அவர் கடுமையாக தண்டித்துவிடுவார் என கேரள வீரர்களை அவர்களின் பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் எச்சரித்தார்.

கடந்த சீசனில் தனது இணையாக இருந்த மானுவல் லாசர்னேட் தற்போது ஏடிகே அணியில் இருந்தாலும், அவர் இல்லாமலேயே கொரா இந்த சீசனின் தொடக்கத்தில் அற்புதமாக விளையாடினார். ஆனாலும் எடு பேடியா மற்றும் ஹ்யூகோ போமஸ் ஆகியோர் கோரா கோல் அடிக்க மிகவும் துணை புரிந்தனர்.

ஃபெரான் கொராமினாசின் இயக்கம், பந்து மீது அவர் வைத்திருக்கும் கண் போன்றவை அற்புதமாக உள்ளது. அதனால் அதிக கோல் அடித்த வீரர் என்ற அவார் அவரைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது .

ஒவ்வொரு 66 நிமிடங்களுக்கும் அவர் கோல் அடிக்கிறார். ஆனால் அவரது முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையில் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. அதே நேரத்தில் சுனில் சேத்ரி, எடு பேடியா, மிக்கு போன்றோரெல்லாம் கோராமினசை விட பின் தங்கியே உள்ளனர்.

கொராமினசின் விளையாட்டு என்பது கோல் அடிப்பது மட்டுமல்ல. எடு பேடியாவுடன் அவர் நல்ல புரிதலைக் கொண்டிருக்கிறார். போமோஸ், ஜாக்கிசந்த் சிங் ஆகியோரும் கொராவுக்கு நன்கு உதவுகிறார்கள்.

மறுபுறம், ஓக்பேச்சால் அவருக்கு எந்த உதவியும் இல்லை. ஆனால் ஃபெடரிகோ காலிகோ ஆட்டத்தை நிறைவு செய்வதற்கும் கொராமினாசுக்கு வாய்ப்புகளை தருகிறார்.

கொரோமினாசைப் பொறுத்தவரை அவர் கோவா அணியில் ஒரு குதிரை வீரனைப் போல் விளையாடி தனது திறமையை நிரூபிப்பார். எஃப்சி கோவா அணி இந்த சீசனில் 21 கோல்களை அடித்துள்ளது. இந்த எண்ணிக்கையை உயர்த்த கொராமினஸ் நிச்சயமாக உதவி செய்வார்.

ஃபெரான் கொராமினாசுக்குப் பின் ஒரு திறமையான அணி இருக்கும்போது, இந்த ஸ்பானிஸ் வீரரை அடித்துக் கொள்ள வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.

(Photos Courtesy - ISL)

Story first published: Wednesday, November 14, 2018, 11:29 [IST]
Other articles published on Nov 14, 2018
English summary
ISL 2018 - Goa’s Ferran Corominas proved what he is capable of after Kerala Blasters match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X