For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

கோல் அடிக்க வாய்ப்பு வேண்டும்.. காத்திருந்து சாதித்த கோவா வீரர் மன்வீர் சிங்!!

கோவா : கவுஹாத்தி இந்திரா காந்தி அதெலட்டிக் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நார்த் ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிராக எஃப்.சி கோவா அணி கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தது. அந்த கோல் வெகுண்டெழுந்து மன்வீர் சிங் அடித்த கோல்தான்.

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் போட்டிகளில் மன்வீர் சிங் எஃப்.சி கோவா அணியில் விளையாடிய மூன்று சீசன்களில், இது அவரது இரண்டாவது கோல் மட்டுமே. மன்வீரின் பெரும்பாலான போட்டிகளில் மிகவும் தாமதமாக சப்ஸ்டியுட்டாக அவர் களம் இறக்கப்படுகிறார். இது அவரது தவறல்ல. கடந்த சீசனில் 19 முறை சப்ஸ்டியுட்டாக இறங்கி விளையாடினார்.

ISL 2019-20 : FC Goa player Manvir Singh talked about his goal in this season

சென்னை எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்சிக்கு எதிராக முதல் இரண்டு ஆட்டங்களை மன்வீர் தொடங்கினார். அவர் சிறப்பாக விளையாடியதாகத்தான் தோன்றியது, மேலும் மூன்றாவது ஆட்டத்திற்காக அவர் பெவிலியனில் இருந்தாலும் அவரது ஆட்டம் பயிற்சியாளர் செர்ஜியோ லோபராவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்.

"எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நான் எனது சிறந்ததைக் கொடுத்தேன். கடந்த சீசனில் ஒரு கோல் கூட அடித்தேன், கோல் அடிக்க உதவியை செய்தேன். இந்த ஆண்டு நான் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினேன். இரண்டுமே மிகச் சிறந்தவை. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் நான் களம் இறங்கி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், என்னை நிரூபிக்க இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்தேன்" என்றார் மன்வீர்.

ISL 2019-20 : FC Goa player Manvir Singh talked about his goal in this season

மன்வீர் சென்டர்-ஃபார்வர்ட் பிளேயராக அவர் தனது நிலையைத் எட்டியுள்ளார் என்பது ஒன்றும் ரகசியமானது இல்லை. ஃபெரான் கொரோமினாஸ் போன்ற கோல் மெஷினைக் கொண்ட ஒரு அணியின் ஒரு பகுதியாக இருப்பது அவரது வரம் தான் என்கிறார் அவர்.

"கொரோமினாஸ் மிகச் சிறந்த வீரராக இருப்பதால் அவருடன் விளையாடுவது எனக்கு ஒரு மிகப் பெரிய விஷயமாக தோன்றுகிறது. . கடந்த இரண்டு சீசன்களில், அவர் லீக்கில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார். . அவர் முடிவெடுப்பது என்பது மிகவும் நல்லது, அவர் பந்தை கொண்டு செல்வது சிறந்ததாக இருக்கும். . இது எனக்கும் கொரோமினாஸுக்கும் இடையிலான ஒரு கடுமையான போட்டியாகும், மேலும் பயிற்சி செஸனில் எனது சிறந்ததை வழங்க முயற்சிக்கிறேன். ஓய்வு என்பது பயிற்சியாளருக்கு மட்டுமே" என்று மன்வீர் கூறினார்.

ISL 2019-20 : FC Goa player Manvir Singh talked about his goal in this season

தொடர்ந்து பேசிய அவர், செர்ஜியோ லோபெரா கிளப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறார். ஒவ்வொரு இந்திய வீரருக்கும் அவரது பயிற்சி மிகவும் நல்லது. பந்து பயிற்சியுடன் அவர் எங்களுக்கு நம்பிக்கையைத் தருகிறார். அவரது தொழில்நுட்ப அறிவால் நமது திறன்களை மேம்படுத்த அவர் எங்களுக்கு நிறைய உதவுவதாக தெரிவித்தார்

அந்த வாய்ப்பு தனக்கு வழங்கப்பட்டபோது மன்வீர் அதை இரு கைகளாலும் இறுகப் பற்றிக்கொண்டார். மேலும், சீசனின் தொடக்கத்தில் ஒரு இளம் ஃபார்ட் பிளேயராக தனக்கு கிடைத்த வாய்ப்புக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

ISL 2019-20 : FC Goa player Manvir Singh talked about his goal in this season

ஹைலேண்டர்ஸுக்கு எதிராக, முந்தைய ஆட்டத்தில் கோரோ செய்ததையே மன்வீரும் செய்தார். அது கடந்த வாரம் பெங்களூரு எஃப்சியை நடத்த கோவாவுக்கு உதவியது .

"பெங்களூரு அணிக்கு எதிராக, நாங்கள் ஒரு கோல் அடித்தோம். இது தாமதமாக அடித்த கோல். பொதுவாக கடைசி நிமிடம் வரை போராடுவது எங்களுக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. கால்பந்தில், எந்த நேரத்திலும் ஒரு கோல் வரலாம். நாங்கள் ஒருபோதும் சரணடைய மாட்டோம். இதனால் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைத்தன" என மன்வீர் தெரிவித்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக கோவா அணியில் இருந்த இந்த பஞ்சாபைச் சேர்ந்த சிறுவன், கோவா கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த திருப்தியைக் கொடுத்துள்ளார்.

"நான் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவன், ஆனால் கோவாவுக்காக விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்குள்ள அனைத்து ரசிகர்களும் மிகச் சிறந்தவர்கள். முடிவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். கோவா மிகவும் அறிவார்ந்த கூட்டத்தைக் கொண்டுள்ளது, எங்களுக்கு பெரும் உந்துதலைத் தருகிறது" என்று கூறுகிறார் மன்வீர் சிங்.

Story first published: Monday, November 4, 2019, 19:14 [IST]
Other articles published on Nov 4, 2019
English summary
ISL 2019-20 : FC Goa player Manvir Singh talked about his one and only special goal in this season.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X