For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
இந்தியன் சூப்பர் லீக் கணிப்புகள்
VS

இங்கே கால்பந்து வெறும் விளையாட்டல்ல.. அது தான் வாழ்க்கை.. நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் கதை!

மும்பை : வடகிழக்கில் கால்பந்து என்பது வெறும் விளையாட்டல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

வடகிழக்கு மாநிலங்கள் எட்டும் பல தலைசிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளன. இங்குள்ள வீரர்களை தவிர்த்து ஒரு கிளப்புக்கான வீரர்களை தேர்வு செய்வது கடினமான செயல்.

ISL 2019-20 : In North East United FC Football is not just a game, it is life

ஹீரோ இந்தியன் சூப்பர் லீக்கில் வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதிநிதியாக நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எஃப்ஸி விளங்குகிறது. ஹை லேண்டர்ஸ் என்றும் இந்த அணி அழைக்கப்படுகிறது.

இப்பிராந்தியத்தில் காலங்காலமாக உள்ள கால்பந்து மீதான காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது நார்த்ஈஸ்ட் அணி. கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பான ரசிகர் பட்டாளத்தை இந்த அணி உருவாக்கியுள்ளது.

2014ல் நடந்த முதல் தொடரில் இந்த அணி நல்ல தொடக்கம் பெறவில்லை. 3 போட்டிகளில் மட்டுமே வென்று பிளே ஆஃப்க்கு தகுதி பெற தவறியது. அடுத்த 3 சீசனிலும் இதே நிலைதான். எனினும் இது போன்ற பின்னடைவுகளால் ரசிகர்கள் தங்கள் அணியை ஒருபோதும் விட்டுத்தரவில்லை.

கிளப் நிர்வாகமும் ரசிகர்களுடன் உறவை சிறந்த முறையில் பராமரிக்கிறது. முந்தைய 4 சீசன்களில் தோற்றாலும் கடந்த சீசனில் நார்த் ஈஸ்ட்டை ஆதரிக்க திரண்டு வந்த ரசிகர்கள் படையே இதற்கு சாட்சி்.

வடகிழக்கு மாநில மக்கள் கால்பந்து வெகுவாக புரிந்துகொண்டுள்ளார்கள் என நினைக்கிறேன். கால்பந்தின் மீதான அவர்கள் காதல் ஈடு இணையற்றது என்கிறார் நார்த் ஈஸ்ட் கிளப்பின் உரிமையாளர் ஜான் ஆபிரஹாம்

நார்த் ஈஸ்ட் ஒரு நல்ல சீசனை பெற 5 ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஈல்கோ ஷட்டோரி (தற்போது கேரளா பிளாஸ்டர்ஸ் பயிற்சியாளர்) பயிற்சியில் கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃப்க்கு முன்னேறியது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் கிளப்.

சில வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் இந்த அணி இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறியிருக்கும். இந்த அணிக்கு அதிதீவிர ரசிகர்கள் உருவாகிக்கொண்டே உள்ளனர்.

கடந்த சீசனில் கவுகாத்தி இந்திராகாந்தி ஸ்டேடியத்திற்கு வந்த சராசரி ரசிகர் எண்ணிக்கை 13,458 ஆகும். பெங்களூரு எஃப்ஸி க்கு எதிரான முக்கியமான போட்டியில் 21,786 ரசிகர்கள் நார்த் ஈஸ்ட்டுக்கு ஆதரவளித்தனர்.

இங்கு ஓமனுக்கு எதிராக நடந்த உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியாவிற்கு ஆதரவு தர 22,788 ரசிகர்கள் வந்திருந்தது இங்குள்ள மக்களின் கால்பந்து மோகத்தை இந்த எண்கள் காட்டுகிறது. கால்பந்து பிரபலமான இப்பகுதியில் அதன் வேர்கள் மேலும் ஆழமாக செல்ல உதவியுள்ளது நார்த்ஈஸ்ட்.

உள்ளூர் திறமைசாலிகளை இந்த கிளப் ஆதரிப்பதே இதற்கு காரணம். நார்த் ஈஸ்ட்டின் பெரும்பாலான வீரர்கள் அப்பகுதியிலிருந்து வந்தவர்களே. கானா அணியின் முன்னாள் வீரர் அஸ்மோவா கியான் இந்தாண்டு நார்த் ஈஸ்ட்டுக்காக ஆடும் நட்சத்திர வீரர்களில் முக்கியமானவர்.

8 மாநிலங்களை சார்ந்த கால்பந்து ரசிகர்களுக்கு புதிய சீசன் காத்துள்ளது. ராபர் ஜார்னியின் பயிற்சியுடன் களமிறங்கும் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, October 17, 2019, 15:19 [IST]
Other articles published on Oct 17, 2019
English summary
ISL 2019-20 : In North East United FC Football is not just a game, it is life
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X